தனது கட்­சிக்­கும் குடும்­பத்­துக்­கும் க.குமார் தலை­வ­ராக இருக்­கட்­டும்

தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார், தனது கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்­கும் குடும்­பத்­தி­ன­ருக்­கும் மட்­டும் தலை­வ­ராக இருக்­கட்­டும். அத­னை­வி­டுத்­துத் தமிழ் மக்­க­ளின் தேசி­யத் தலை­வ­ராக காட்­டிக் கொள்­ளும் கேலிக் கூத்­துக்­களை நிறுத்த வேண்­டும்.

இவ்­வாறு ஜன­நா­ய­கப் போரா­ளி­கள் கட்­சி­யின் ஊட­கப் பேச்­சா­ளர் எஸ்.துளசி தெரி­வித்­தார். “தம்பி பிர­பா­க­ரன் இப்­போது இறந்து விட்­டார். அவர் விட்­டுச் சென்ற கொள்­

கை­க­ளைக் கடைப்­பி­டித்து வரு­கின்ற எமது மாம­னி­தர் குமார் பொன்­னம்­ப­லத்­தின் மகன் கஜேந்­தி­ர­கு­மார் தலை­மை­யில் எமது இனம் ஒன்­று­பட்­டுத் திரண்டு போரா­டு­வ­தன் மூலம்­தான் எமது இழந்த உரி­மை­க­ளைப் பெற்­றெ­டுக்க முடி­யும்” என்று அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ர­ஸின் தலை­வர் ஆனந்­த­ராசா தெரி­வித்­தி­ருந்­தார்.

கிட்டு பூங்­கா­வில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற தொழி­லா­ளர் தினக் கூட்­டத்­தில் அவ்­வாறு கூறி­யி­ருந்­தார். இது தொடர்­பில் துள­சி­யி­டம் தொடர்­பு­கொண்டு கேட்­ட­போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

“தமி­ழீழ விடு­த­லைப் போராட்­டத்­தில் முள்­ளி­வாய்க்­கால் போரின் இறு­தி­யில் என்ன நடந்­தது? அன்­றைய சூழ்­நி­லை­யில் விடு­த­லைப் புலி­க­ளி­னு­டைய தலை­மை­யின் முடிவு என்­ன­வாக இருந்­தது என்­ப­ன­வற்றை காலம்­தான் பதில்­கூ­றும். அதற்­கா­கத்­தான் முன்­னாள் போரா­ளி­க­ளான நாம் பார்த்­துக் கொண்டு இருக்­கின்­றோம். உல­க­மும் தமிழ் மக்­க­ளும் அது­வரை பொறுமை காக்க வேண்­டும்.

ஈழப் போராட்­டத்­தின் இறு­தித் தரு­ணம்­வரை பங்­கு­பற்றி போரா­டிய எத்­த­னையோ போரா­ளி­கள் உள்­ள­னர். முள்­ளி­வாய்க்­கா­லில் இறு­தி­யில் என்ன நடந்­தது என்­பது அவர்­க­ளுக்கு மட்­டுமே தெரி­யும். விடு­த­லைப் புலி­க­ளின் தலைமை என்ன முடிவு எடுத்­தி­ருந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்த காலம் தேவை” என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!