அனைத்துலக சட்ட நிபுணர்களுக்கு விசாரணையில் இடமில்லை – சிறிலங்கா அரசு

வெளிநாட்டு சட்ட நிபுணர்களுக்கு உள்நாட்டு விசாரணைகளில் இடமளிக்கப்படமாட்டாது என்று சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல,

”ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், எத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், சிறிலங்காவுக்கு ஆலோசனை வழங்கும் சில விடயங்களில் அனைத்துலக சட்ட நிபுணர்களின் பங்கு மட்டுப்படுத்தப்படும்.

அனைத்துலக நிபுணர்களிடம் இருந்து கோரப்படும் ஆலோசனை தொழில்நுட்ப உதவிகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்படும்.

வெளிநாட்டு நிபுணர்கள் வழக்கு விசாரணைகளில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.

கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விட சிறிலங்காவுக்கு சாதகமான தீர்மானமே ஜெனிவாவில் முன்வைக்கப்படவுள்ளது.

போர் தொடர்பான விசாரணைகளில், அனைத்துலக நிபுணர்களின் தலையீட்டுக்கு நாம் தள்ளப்படுவதற்குக் காரணம், முன்னைய அரசாங்கத்தின் தவறுகள் தான் காரணம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!