இறுதிச் சந்தர்ப்பத்தையும் நழுவவிட்டால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டிய வரும்! – சம்பந்தன்

கிடைத்­துள்ள இறு­திச் சந்­தர்ப்­பத்­தைத் தவ­ற­வி­டாது இனி­யா­வது அரசு செய்ய வேண்­டி­யதை செய்­யட்­டும். இல்­லை­யேல் பார­தூ­ர­மான பின்­வி­ளை­வு­களை அரசு சந்­திக்க வேண்டி வரும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ர் இரா.சம்­பந்­தன் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்­பில் ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் மிச்லே பச்­செ­லெட் கடந்த வெள்­ளிக்­கி­ழமை வெளி­யிட்­டுள்ள அறிக்கை தொடர்­பில் கருத்­துத் தெரி­விக்­கும்­போதே இரா.சம்­பந்­தன் இவ்­வாறு கூறி­னார்.

‘ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் இலங்கை தொடர்­பில் வெளி­யிட்­டுள்ள காட்­ட­மான அறிக்­கையை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மன­தார வர­வேற்­கின்­றது. ஐ.நா. தீர்­மா­னத்­தின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கும் பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்­கும் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்­கும் இலங்கை அர­சுக்கு இறு­திச் சந்­தர்ப்­பம் கிடைத்­துள்­ளது. இனி­யா­வது அரசு ஐ.நா. தீர்­மா­னத்­தின் பரிந்­து­ரை­களை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும். வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வேண்­டும்.

அதே­வேளை, பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் கண்­கா­ணிப்­புக்­கான காலத்தை நீடித்து ஜெனி­வா­வில் இம்­முறை நிறை­வே­ற­வுள்ள புதிய தீர்­மா­னத்­துக்­கும் அரசு இணை அனு­ச­ரணை வழங்கி அத­னை­யும் செயற்­ப­டுத்த நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டும்.

ஐ.நா. தீர்­மா­னத்­தின் பரிந்­து­ரை­க­ளைச் செயற்­ப­டுத்த இலங்கை அரசு ஆரம்­ப­கட்ட நட­வ­டிக்­கை­களை மட்­டும் எடுத்­தது. அதில் முன்­னேற்­றங்­கள் எது­வும் காணப்­ப­ட­வில்லை. பல பரிந்­து­ரை­கள் இன்­ன­மும் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இதை ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் கடு­மை­யா­கக் கண்­டித்­துள்­ளார். இலங்­கைக்கு எதி­ரா­கக் கடும் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என­வும் அவர் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.

நீதி­யைக் கோரி நிற்­கும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் நலன் கருதி ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் எடுக்­கும் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் நாம் முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­வோம்.

அதே­வேளை, இலங்கை அர­சுக்­கும் எச்­ச­ரிக்­கை­யு­டன் ஒன்­றைக்­கூ­றி­வைக்க விரும்­பு­கின்­றோம். அதா­வது, கிடைத்­துள்ள இறு­திச் சந்­தர்ப்­பத்­தைத் தவ­ற­வி­டாது இனி­யா­வது அரசு செய்ய வேண்­டி­யதை செய்­யட்­டும். இல்­லை­யேல் பார­தூ­ர­மான பின்­வி­ளை­வு­களை அரசு சந்­திக்க வேண்டி வரும் என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!