மக்களுக்காக இந்த பாதீடு தோற்கடிக்கப்படும் – மஹிந்த

கடன் சுமை, பொருளாதார நெருக்கடியின் பிடிக்குள் சிக்குப்பட்டுள்ள நடுத்தர மக்களை மேலும் நெருக்கடிகளுக்குள்ளாக்கும் வரவு – செலவு திட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மாத்தறை பொல்ஹேன பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் தற்போது பாராளுமன்றததில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கவர்ச்சியான சொற்பிரயோகங்கள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளது. நடைமுறைக்கு பொருத்தமற்ற விடயங்கள் பல வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் கடன் சுமைக்குள் இன்று தள்ளப்பட்டுள்ளார்கள், மறுபுறம் தேசிய உற்பத்திகளும் வீழ்ச்சியடைந்து வருகின்றது. தபோதைய வரவு செலவு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால். மக்கள் மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படுவார்கள். ஆகவே மக்களுக்காக இந்த பாதீடு தோற்கடிக்கப்படும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!