இந்தியாவிலேயே முதன்முறையாக காதலி ஆணாகவும், காதலன் பெண்ணாகவும் மாறி திருமணம்

இந்தியாவிலேயே முதன்முறையாக காதலன் பெண்ணாகவும், காதலி ஆணாகவும் மாறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த திருமணம் அடுத்த மாதம் கேரளாவில் நடக்கவுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக காதலி ஆணாகவும், காதலன் பெண்ணாகவும் மாறி திருமணம்
காதல்… காதலுக்காக ஜாதி, மதம் மாறி திருமணம் நடப்பதை பாத்துள்ளோம். ஏன் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் மாறி திருமணம் நடந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எல்லாவற்றையும் விஞ்சும் அளவுக்கு பாலியல் மாறி காதலன் பெண்ணாகவும், காதலி ஆணாகவும் மாறி இந்தியாவிலேயே முதன்முறையாக கேரளாவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த ருசிகர சம்பவம் குறித்த விபரம் வருமாறு:

கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 25) நடன கலைஞர். சினிமாவில் துணை நடிகராகவும் உள்ளார். இவரது தோழி இசான்கேசான் (19) பிளஸ்-2 முடித்துள்ளார்.

2013-ம் ஆண்டு சூர்யாவும், இசான் கேசானும் சந்தித்தனர். அப்போது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. பின்னர் அதுவே காதலாக மாறியது. இருவரும் 6 மாதம் காதலித்தனர். அப்போது இருவரும் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். காதலன் பெண்ணாவும், காதலி ஆணாகவும் மாறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2014-ம் ஆண்டு சூர்யா ஆபரேசன் மூலம் பெண்ணாக மாறினார். அவரது காதலி 2015-ம் ஆண்டு ஆபரேன் மூலம் ஆணாக மாறினார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இது குறித்து பெற்றோர்களிடம் சம்மதம் கேட்டனர்.

அவர்களும் இந்த திருமணத்துக்கு சம்மதம் வழங்கினர். அதன்படி அடுத்த மாதம் கேரள அரசின் திருமண சிறப்பு திருத்த சட்டப்படி திருமணம் நடைபெற உள்ளது. இந்தியாவிலேயே ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மாறி திருமணம் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!