பூமியைக் காப்பாற்ற பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்ட 16 வயது சிறுமி.

நடப்பாண்டு அமைதிக்கான நோபல் பரிசை ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டாவுக்கு வழங்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஸ்வீடனைச் சேர்ந்த கிரேட்டா தன்பர்க் (Greta Thunberg) என்ற இந்த சிறுமி பூமி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச் சூழல் மாசடைவது குறித்து ஏராளமான போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். இதற்காக தனது பள்ளிப் படிப்பைக் கூட பாதியிலேயே நிறுத்தி விட்ட கிரேட்டா, சுற்றுச்சூழலைக் காப்பாற்ற ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், நார்வே நாட்டைச் சேர்ந்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிரேட்டாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஃப்ரட்டி ஆண்ட்ரே (Freddy Andre ), பூமியைக் காப்பாற்ற பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் கிரேட்டா, நோபல் பரிசுக்கு முழுமையான தகுதி உடையவர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு குறித்த ஏராளமான கூட்டங்களிலும் பங்கேற்று வரும் அவர், தனது இளமைப் பருவத்தை அதற்காகவே அர்பணித்து விட்டார் என்றும் ஃப்ரட்டி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!