பார்வதி அம்மாவைப் பார்க்காதவர்கள் இப்ப புலிப் பாட்டுப் போடுகினம்

நம் தமிழ் மண்ணில் நடக்கின்ற அரசியல் கலாசாரத்தை நினைக்கும் போதெல்லாம் ஊழிக்காலம் ஆரம்பித்து விட்டதோ என்று எண்ணத் தோன்றும். அந்தளவுக்கு பித்தலாட் டம் சிரசுக்கேறி நின்று ஆடுகிறது.

விடுதலைப் புலிகள் தொடர்பில் எதிரான கருத்துக்களை முன்வைத்த தமிழ் அரசியல் வாதிகள் சிலர் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரித்தால், விடுதலைப் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்ட வர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறினர்.

ஐயா! விடுதலைப் புலிகள் இல்லாதபோது புலிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறுவது எந்தளவுக்கு நியாயம் என்று அந்த அரசியல்வாதிகள் சார்ந்த கட்சியினர் கேட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை.
இது ஒருபுறமிருக்க, தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பை விடுதலைப் புலிகள் ஆரம்பிக்கவில்லை என்பார் ஒரு தமிழ் அரசியல்வாதி ஒருவர்.
சரி, விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் இல்லாத துணிச்சலில் எல்லாம் நடக்கிறது என்று விட்டால்,

இப்போது மீண்டும் விடுதலைப் புலிகளின் புகழைப் பாடுவதில் சில தமிழ் அரசியல்வாதி கள் அதிதீவிரம் காட்டுகின்றனர்.
ஆம், மே தின நிகழ்வை நடத்திய ஒரு அரசி யல் கட்சி விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடல் களை ஒலிபரப்பியுள்ளது.

மே தினக் கூட்டத்துக்கு ஆட்சேர்ப்புச் செய் வதற்காக இத்தந்திரம் பின்பற்றப்பட்டதாகப் பல ரும் பேசிக் கொண்டனர்.
கடவுளே! விடுதலைப் புலிகள் அமைப்பு இல் லாமல் ஆக்கப்பட்ட பின்னர் விடுதலைப் புலி கள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் தாயும் தந்தையும் அனுபவித்த கஷ்டங்கள் கொஞ்சமல்ல.

அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப் பட்டனர். பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை அவர்கள் சிறையிலேயே உயிரிழந்தார்.
அவர் சிறையில் உயிரிழந்ததால் பிரபாகர னின் தாயார் பார்வதி அம்மையாரை விடுதலை செய்தனர்.

சுருங்கக்கூறின் வேலுப்பிள்ளை அவர்கள் தன்னுயிரை நீத்து தன் மனைவி பார்வதிக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தார் என்று கூறலாம்.
இவையயல்லாம் நடந்தபோது, பிரபாகர னின் பெற்றோரை சிறையில் பார்ப்பது பற்றி தமிழ் அரசியல்வாதிகள் சிந்தித்திலர்.

அல்லது வயோதிபப் பெற்றோர்களைச் சிறை யில் அடைத்து வைத்து அநியாயம் செய்யாதீர் கள் என்றேனும் கூறவில்லை.
ஏன்? பார்வதி அம்மையாரை வல்வெட்டித் துறை வைத்தியசாலையில் வைத்துப் பராமரி த்தபோது அவரைச் சென்று பார்க்க வேண்டு மென தமிழ் அரசியல் தலைமை என்று தங் களைக் கூறிக்கொண்டோர் நினைக்கவில்லை.

ஆனால் கடந்த மே தினக் கூட்டத்தில் விடு தலைப் புலிகளின் புரட்சிப் பாடல்களை ஒலி பரப்பி தாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளில் பற்றுள்ளவர்கள். தங்களின் சிந்தையயல் லாம் தமிழர்களின் உரிமை பற்றியது என் பதுபோல பாசாங்கு செய்கிறார்கள்.
இறைவா! இந்த அநியாயங்களுக்கு முடிவே இல்லையா? இதைச் சொல்வதற்காக வடக்கு மாகாண சபை உறுப்பினர் கெளரவ சிவாஜி லிங்கம் மற்றும் சிலரும் நம்மை குறை விளங் கக்கூடாது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!