சுட்டெரிக்கும் வெயிலில் காட்டுப்பூச்சிகளுக்கு இரையாகிய பிறந்த குழந்தை: தாயை தேடி பொலிஸார் வலைவீச்சு

பிலிப்பைன்ஸ் நாட்டில் பிறந்து ஒரு மணி நேரம் மட்டுமேயான பிஞ்சுக்குழந்தை, காட்டுப்பகுதியில் இருந்து பூச்சிக்கடியுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற அனுமதிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒலங்கோ தீவில் உள்ள காட்டுப்பகுதியில் பிஞ்சுக்குழந்தை ஒன்று நீண்ட நேரமாக அழுதுகொண்டிருந்துள்ளது. அப்பகுதி வழியாக சென்ற பெண் ஒருவர், குழந்தை அழும் சத்தம் கேட்டு தேட ஆரம்பித்துள்ளார்.

அப்போது சுமார் 35 டிகிரி வெயிலில் ஆடை எதுவும் இல்லாமல் முகம் கருகிய நிலையில் கிடந்த குழந்தையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

முட்புதருக்குள் பூச்சி கடியுடனே அந்த குழந்தை கதறி அழுதுகொண்டிருந்துள்ளது. அருகிலுள்ள தேவாலயம் அருகே தங்கியிருந்த பொதுமக்கள் இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு வேகமாக உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

உடனே இந்த தகவல் பொலிஸாருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், உடனடியாக குழந்தையை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

மேலும், குழந்தையை தூக்கி எறிந்துவிட்டு சென்ற குழந்தையின் தாயை தீவிரமாக தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!