“வெளிநாடுகளில் கல்வி கற்க செல்வோர் நாடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்”

இலங்கையிலிருந்து ஆண்டொன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்பதற்காக செல்கின்றபோதிலும் அவர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதில்லையென நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன சபையில் தெரிவித்தார்.

அத்துடன் இவர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்புவது உறுதி செய்யப்பட வேண்டும். ஏனெனில் கல்வி என்பது அரசினால் மட்டும் கட்டி எழுப்பப்படக்கூடியதல்ல. அதற்கு பல்வேறு தரப்பினரினதும் பங்களிப்பு அவசியம்.

எனவே தான் வெளிநாடு சென்று கல்வி கற்போர் மீண்டும் நாடு திரும்புவது உறுதி செய்யப்படவேண்டு மெனக்கோருகின்றேன் என்றார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கல்வி அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி,நீர்ப்பாசனம், மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியவற்றின் மீதான நீதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்ததார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!