காலவரம்புடன் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்கா அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, காலவரம்புக்குட்பட்ட வகையிலான மூலோபாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று நடந்த விவாதத்தில் உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி,

“சிறிலங்கா உடனடியாக, தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், நிலையான நல்லிணக்க செயல்முறையை நிறுவுவதற்கான நிலையான நடவடிக்கையை, முன்னெடுப்பதற்கு தெளிவான காலவரம்புடன் கூடிய மூலோபாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிறிலங்காவில் துன்புறுத்தப்படுவது மற்றும் கண்காணிக்கப்படுவது தொடர்பாக தொடர்ச்சியாக கிடைக்கும் அறிக்கைகள் கவலை அளிக்கிறது.” என்றும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!