நிவாரணங்களை வழங்கி வறுமையை ஒழிக்க முடியாது – மஹிந்த அமரவீர

நிவாரணங்கள் வழங்கி நாட்டில் வறுமையை ஒழிக்க முடியாது. அத்துடன் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராக குரல்கொடுப்பதுபோல் அரசாங்கத்தின் நல்ல வேலைத்திட்டங்களுக்கும் ஆதரவளிப்போம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடாவுமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் ஆரம்ப கைத்தொழில் சமூக வலுவூட்டல் அமைச்சு, பொது வழங்கல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு மற்றும் விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

ஆரம்ப கைத்தொழில் அமைச்சை கட்டியெழுப்பும் திறமை அமைச்சருக்கு இருந்தாலும் இம்முறை வரவு செலவு திட்டத்தில் இதற்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. இதுதொடர்பாக நிதி அமைச்சர் கவனம் செலுத்தவேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!