லிமா -2019 பாதுகாப்பு கண்காட்சியில் சிறிலங்கா கடற்படை

மலேசியாவின் லங்காவி நகரில் நடைபெறவுள்ள அனைத்துலக கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி (லிமா) – 2019 சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா கடற்படையின் எஸ்எல்என்எஸ் சாகர என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை திருகோணமலைத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

கப்டன் அனில் போவத்தை தலைமையில் 180 கடற்படையினர் இந்த போர்க்கப்பலில் மலேசியா சென்றுள்ளனர்.

லிமா-2019 பாதுகாப்பு கண்காட்சியில் உலகின் பல்வேறு நாடுகளின் கடற்படைக் கப்பல்கள், விமானங்கள் பங்கேற்கின்றன.

இந்தக் கண்காட்சி எதிர்வரும் மார்ச் 26ஆம் நாள் தொடக்கம், 30ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!