எனது மகன் விருப்­பப்­படி இனிமேல் மது அருந்த­மாட்டேன்!!!

எனது மகன் விருப்பப் படி இனிமேல் மது அருந்த மாட்டேன்” என்று தற்­கொலை செய்­து­கொண்ட மாணவர் தினேஷின் தந்தை உருக்­க­மாகக் கூறி­யுள்ளார்.

தமிழ்நாடு- நெல்லை மாவட்டம் சங்­க­ரன்­கோவில் அருகே உள்ள ரெட்­டி­ய­பட்­டியைச் சேர்ந்­த மாட­சாமியின் 17 வயதான மகன் தினேஷ் நல்­ல­சிவன் ரயில்வே மேம்­பா­லத்தில் தூக்­குப்­போட்டு தற்­கொலை செய்­து­கொண்டார்.

தனது தந்தை மாட­சாமி மதுப்­ப­ழக்­கத்தை கைவிட மறுத்­ததால் அவர் தற்­கொலை செய்­து­கொண்­டமை தெரி­ய­வந்­தது. அவர் எழு­தி­யி­ருந்த கடி­தத்தில் தான் இறந்த பிற­கா­வது மதுப்­ப­ழக்­கத்தை கைவி­டு­மாறு தந்­தைக்கு உருக்­க­மான கோரிக்கை விடுத்திருந்தார். மதுக்­க­டை­களை மூட மத்­திய–மாநில அர­சு­க­ளுக்கும் கோரிக்கை விடுத்­தி­ருந்தார். இச் சம்­பவம் தமி­ழகம் முழு­வதும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

தினேஷ் நல்­ல­சி­வனின் உடல் நேற்று முன்­தினம் மாலை அடக்கம் செய்­யப்­பட்­டது. அப்­போது மாட­சாமி தனது மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதார். எனது குடிப்­ப­ழக்­கத்தால் மகனை இழுந்­து­விட்­டேனே என்று கூறி கதறித் துடித்தார்.

பின்னர் மாட­சாமி உருக்­க­மாக கூறி­ய­தா­வது:-

“எனது மகன் குடிப்­பழக் கத்தை கைவி­டும்­படி என்­னிடம் எவ்­வ­ளவோ கேட்­டுக்­கொண்டான். ஆனால் என்னால் குடிப்­ப­ழக்­கத்தை நிறுத்த முடி­ய­வில்லை. இப்­போது வைத்­தி­ய­ராக வேண்­டிய எனது மகனை இழந்து தவிக்­கிறேன். எனது சகோ­த­ரர்கள் நல்ல முறையில் அவனைப் படிக்­க­வைத்­தனர். அவன் இந்த முடிவை எடுத்­தி­ருக்­கக்­கூ­டாது. வாழ்ந்து காட்­டி­யி­ருக்க வேண்டும். அவ­னது விருப்­பப்­படி நான் குடிப்­ப­ழக்­கத்தை நிறுத்­தி­விட்டேன். இனிமேல் குடிக்­க­மாட்டேன். அப்­போது தான் அவ­னது ஆத்மா சாந்தியடையும்.

என்னைப் பார்த்து மது அருந்­து­கின்றவர்கள் திருந்த வேண்டும். குடும்­பத்தை சீர­ழிக்கும் மதுக்­க­டை­களை மூட அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.’ என்று கூறி­யுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!