டிவிட்டர் பயனாளிகள் பாஸ்வேர்டை உடனடியாக மாற்ற வேண்டும்!

பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் தகவல்கள் தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பயனாளிகளின் தகவல்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. தன்னுடைய பயனாளிகளின் தகவல்களை ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ என்ற நிறுவனத்திற்கு விற்றதாக பேஸ்புக் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதே குற்றச்சாட்டில் டிவிட்டர் தளமும் சிக்கியது.

இந்நிலையில் தற்போது டிவிட்டர் தளம், தன்னுடைய 30 கோடி பயனாளிகள் உடனடியாக தங்களது பாஸ்வேர்டை மாற்ற கோரிக்கை விடுத்துள்ளது. டிவிட்டர் வலைதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதன் பயனாளிகள் 30 கோடி பேரின் பாஸ்வேர்டும் தனியாக லாக் ஒன்றில் சேமிக்கப்பட்டதாகவும், இதில் சில பாஸ்வேர்டுகள் கசிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் பாஸ்வேர்டு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!