அனைத்துலக நீதிமன்றுக்கு கொண்டு செல்ல முடியாது – சுமந்திரனுக்கு சமரசிங்க பதிலடி

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு சிறிலங்காவை கொண்டு செல்ல முடியாது என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த விவாதத்தில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு கூறினார்.

”மனித உரிமை மீறல்கள் குறித்த உள்ளூர் விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முன்னைய அரசாங்கம் தவறி விட்டது. அது சிறிலங்காவின் தவறு.

அனைத்துலக விசாரணையைத் தவிர்ப்பதற்கு உடனடியாகவே, உள்நாட்டு பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை இல்லாத நிலையில் தான், அனைத்துலக விசாரணைக்கான கோரிக்கை எழுகிறது.

சிறிலங்காவை அனைத்துலக நீதிமன்றத்தின் முன் கொண்டு செல்லப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் எச்சரித்திருந்தார்.

அவ்வாறான நகர்வு நடைமுறைச் சாத்தியமற்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க றோம் உடன்பாட்டில் கைச்சாத்திய மறுத்து விட்டார்.

அதனால் அனைத்துலக நீதிமன்றத்துக்கு சிறிலங்காவை கொண்டு செல்ல முடியாது” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!