சாலையோரத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணை ஆசிர்வதித்தார் போப்

pope-italyஇத்தாலியில் உள்ள கலாப்ரி நகரில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு போப் பிரான்சிஸ் திரும்பி வந்தபோது சாலையோரத்தில் படுக்கையில் கிடத்திவைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை ஆசிர்வதித்தார்.

அப்பெண்ணின் குடும்பத்தினர் சாலையோரம் வைத்திருந்த பேனரில், போப் அவர்களே தேவதையை பார்க்க தயவு செய்து நில்லுங்கள் என்று எழுதியிருந்ததுடன் சாலையில் போப் வருவதை பார்த்தவுடன் அவரது காரை நிறுத்துமாறு சைகை செய்ததை கவனித்த போப், தனது காரை நிறுத்தச் சொல்லி அதிலிருந்து இறங்கி அப்பெண்ணை ஆசிர்வாதம் செய்ததோடு அவரது நெற்றியில் முத்தமிட்டார். அப்பெண்ணின் குடும்பத்தாரிடமும் அவர் கைகுலுக்கினார்.

மாபியா கும்பலால் போப்பிற்கு ஆபத்து நேரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளபோதும், அதைப் பொருட்படுத்தாமல் எவ்வித பயமுமின்றி போப் தனது டிரைவரிடம் காரை நிறுத்த சொன்ன போப், சாலையோரம் நின்றிருந்த அவர்களுக்கு ஆசிர்வாதம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply