எதிரணியின் தவறுகளால் தமிழர்களுக்கு நன்மைகள்!!

தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை யில்லாத் தீர்மான விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு விதித்­துள்ள நிபந்­த­னை­கள், நாட்­டின் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தல் விடுக்­கும் வகை­யில் அமைந்­துள்­ள­தாக கூட்டு எதி।­ர­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தெரி­வித்­துள்­ளமை ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. எதி­ர­ணி­யின் பக்­க­மி­ருந்து எப்­போ­துமே இன­வா­தக்­கூச்­சல்­களே எழு­வ­தால் இவர்­க­ளின் கருத்­தைப் பெரி­தாக எடுத்­துக்­கொள்ள வேண்­டிய அவ­சி­யம் கிடையாது.

தென்­ப­குதி அர­சி­யல்­வா­தி­க­ளது
எழுந்­த­மா­ன­மான குற்­றச்­சாட்­டுக்கள்

தென்­ப­குதி அர­சி­யல்­வா­தி­கள் பழைய அர­சி­யல் சம்­பி­ர­தா­யங்­க­ளி­லி­ருந்து சிறிதளவாவது மாறி யுள்ளதாகத் தெரி­ய­வில்லை. பண்­டா­ர­நா­யக்க போன்­ற­வர்­கள் விதைத்த இன­வாத வித்­துக்­கள் முற்­றாக அழிந்து விடாது இன்­ன­மும் இன­வா­தி­கள் மனங்­க­ளில் நீண்டு நிலைத்­துள்­ளன.

தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை எதிர்ப்­ப­தற்­காக சம்­பந்­த­னும், ரணி­லும் இர­க­சிய ஒப்­பந்­த­மொன்­றைச் செய்­ததாக கூட்டு எதி­ர­ணித் தரப்­பி­ன­ரால் ஆரம்­பத்­தில் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப் பட்டு வந்­தது. ஆனால் அவ்­வாறு எது­வும் இடம்­பெ­ற­வில்­லை­யென கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் மறுத்­து­ரைத்­தார்.

ஆனால் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமி­ழர்­கள் எதிர்­கொள்­கின்ற முக்­கி­ய­மான பிரச்­சி­னை­ கள் சில­வற்­றுக்­குத் தாம் தீர்வு காண்­ப­தா­கத் தெரி­வித்து ஒரு கடி­தத்தை சம்­பந்­த­னுக்கு அனுப்பி வைத்­த­தாக வேறொரு பக்­கத்­தில் இருந்து தக­வல் கசிந்­துள்­ளது. ரணில் தரப்­பில் இருந்து இது தொடர்­பாக எது­வும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் கூட்டு எதி­ர­ணி­யி­னர் வழக்­கம் போன்று இன­வா­தச் சிந்­த­னை­யு­டன் குட்­டை­யைக் குழப்­பு­வ­தைக் காண முடி­கின்­றது.

தமிழ்­மக்­கள்சகல உரி­மை­க­ளை­யும்
அனு­ப­விக்க உருத்­து­டை­ய­வர்கள்

தமி­ழர்­கள் இந்த நாட்­டில் சகல உரி­மை­க­ளை­யும் கொண்­ட­வர்­க­ளாக வாழ்­வ­தற்­குத் தகுதி படைத்­த­வர்­கள் என்­பது வர­லாறு கூற­கின்ற உண்­மை­யா­கும்.ஆனால் இன­வா­தி­கள் பெளத்த மதத் தலை­வர்­க­ளின் உத­வி­யு­டன் வர­லாற்­றைத் திரித்­துக் கூறு­வ­தற்கு முற்­ப­டு­கின்­ற­னர். தமி­ழர்­கள் இடை­யில் வந்து குடி­யே­றி­ய­வர்­க­ளெ­னப் பொய் உரைக்­கின்­ற­னர். பெரும்­பான்­மை­யின மக்­கள் இவர்­கள் கூறு­வ­தைச் சரி­யென ஒப்­புக்கொள்­வ­தால் இன ஐக்­கி­யம் மேலும் பாதிக்­கப்­ப­டு­கின்­றது.

உண்­மை­யில் தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை எதிர்க்­கட்­சித் தலை­வர் என்ற வகை­யில் சம்­பந்­தன்­தான் கொண்டு வந்­தி­ருக்க வேண்­டும். ஆனால் எதி­ர­ணி­யொன்று இதைக் கொண்டு வரு­வ­தும், எதிர்க்­கட்சி அதை எதிர்ப்­ப­தும், இந்த நாட்­டில் மட்­டுமே நிக­ழக்­கூ­டிய அர­சி­யல் அற்­பு­தங்­கள். இதை ஏற்­ப­டுத்­தி­ வைத்தவர்­கள் இன­வா­தி­க­ளே­யென்­பதை ஒப்­புக்­கொள்­ளத்­தான் வேண்­டும்.

தமது எண்­ணத்தை நிறை­வே­ற­வி­டாது தடுப்­ப­தற்கு உத­விய கூட்­ட­மைப்­பின் மீது எதி­ர­ணி­யி­னர் வன்­மம் பாராட்டுவதில் நியா­யம் இருக்­கத்­தான் செய்­கின்­றது. ஆனால் கூட்­ட­மைப்­பின் பக்­கம் உள்ள நியா­யத்­தை­யும் அவர்­கள் புரிந்து கொள்ள வேண்­டும். கொடிய இனப் போர் ஓய்ந்­த­தன் பின்­ன­ரும், தமி­ழர்­கள் நிம்­ம­தி­யாக வாழ­வில்­லை­யென்­றால் அதற்­குக் கார­ணம் என்ன?

இந்த நாட்­டின் ஆட்­சி­யா­ளர்­கள் மற்­றும் இன­வா­தி­களே இதற்­குப் பொறுப்­புக் கூற வேண்­டும்.அரசு தமி­ழர்­க­ளுக்கு எதை­யா­வது செய்­வ­தற்கு முற்­ப­டும்­போது அதற்கு முட்­டுக்­கட்டை இடு­ப­வர்­கள் இந்த இன­வா­தி­கள்­தான். அர­சுக்கு மனம் இருந்­தா­லும் , அதைச் செய்­ய­வி­டா­மல் எதி­ர­ணி­யி­னர் தடுத்து விடு­வ­தில் வெற்­றி­யும் பெற்று விடு­கின்­ற­னர்.

இந்த நாட்­டின் வளர்ச்சி சுபீட்­சம்,மகிழ்ச்சி, அமைதி ஆகிய அனைத்­தும் இனப் பிரச்­சி­னைக்­கான தீர்­வி­லேயே தங்­கி­யுள்­ளன. இதில் குழப்­பம் ஏற்­ப­டும் போது நாடே குழம்பி விடு­கின்­றது.

சம்­பந்­த­னது நிலைப்­பாடு குறித்து
முரண்­பட்ட கருத்­துக்­கள்
வெளி­யி­டும் இன­வா­திகள்

சம்­பந்­த­னின் நிபந்­த­னை­கள் நிறை­வேற்­றப்­பட்­டால், நாட்­டின் பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யாக மாறி­வி­டும், தமி­ழர்­க­ளுக்­கெ­னத் தனி­நாடு என்­பது உரு­வா­கி­வி­டும் என்­ப­தில் எவ்­வித அர்த்­த­மு­மில்லை. விடு­த­லைப் புலி­கள் தனி நாடு கோரிப்­போ­ரா­டிய காலம் ஒன்­றி­ருந்­தது. அவர்­க­ளுக்­குப் பின்­னர் தனி­நாடு தொடர்­பாக எவ­ருமே பேசு­வ­தில்லை. ஒரே நாட்­டுக்­குள் சகல அதி­கா­ரங்­க­ளை­யும் கொண்ட கூட்­டாட்சி பற்­றியே தமிழ்த் தலைமை பேசு­கின்­றது.

சம்­பந்­தன் ஏற்­க­னவே இதைத் தெளி­வா­கக் கூறி­விட்­டார். விக்­னேஸ்­வ­ரன், கஜேந்­தி­ர­கு­மார் போன்­ற­வர்­கள் மக்­க­ளின் ஆத­ரவை ஈட்­டிக்­கொள்­ளும் நோக்­கில் வாயில் வந்­த­தை­யெல்­லாம் கூறு­கி­றார் கள். அர­சி­யல் ரீதி­யில் ஒரு­போ­துமே நிறை­வேற்­றிட இய­லாத காரி­யங்­கள் தொடர்­பா­க­வும் பேசு­கின்­ற­னர். இவர்­க­ளின் கருத்­துக்­களை ஒட்­டு­மொத்­த­மா­கத் தமி­ழர்­க­ளின் கருத்­தெ­னக் கொள்ள முடி­யாது.
சம்­பந்­தனை எதிர்க்­கட்­சித்­த­லை­வர் பத­வி­யில் இருந்து அகற்­றி­விட்டு, தம்­மில் ஒரு­வரை அந்­தப்­ப­த­விக்கு நியா­ய­மிப்­பதே கூட்டு எதி­ர­ணி­யின் திட்­ட­மா­கும்.

இதற்­கா­கவே சம்­பந்­த­னுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தைக் கொண்டு வரு­வ­தற்­கும் அவர்­கள் முயற்சி செய்­கின்­ற­னர். ஆனால் தலைமை அமைச்­ச­ருக்கு எதிராகக்­கொண்­டு­வ­ரப்­பட்டு தோல்­வி­யில் முடிந்த தீர்­மா­னம் போன்று இது­வும் தோல்­வி­யி­லேயே முடி­யும் என்­பதை உணர முடிந்­தது.

இந்த நாட்­டின் மீது பன்னாட்டுச் சமூகத்தின் பார்வை நல் அக்கறையுடன் வீழ்ந்­தி­ருக்­கி­றது என்­பதை எதி­ர­ணி­யி­னர் ஒரு­க­ணம் புரிந்து கொள்ள வேண்­டும். அவர்­கள் மீண்­டும், மீண்­டும் மேற்­கொள்­ளும் தவ­று­கள், தமி­ழர்­க­ளுக்­குச் சாத­க­மா­ன­வை­யா­கவே ஆகி­வி­டும் என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!