அமெரிக்காவில் உள்ள Cotton USA என்ற அமைப்பு அமெரிக்க தம்பதிகளிடம் ஒரு வித்தியாசமான கருத்துக்கணிப்பு ஒன்றை எடுத்துள்ளது. தம்பதிகள் இரவில் படுக்கையில் தூங்கும்போது என்ன மாதிரியான உடை அணிந்து தூங்குகின்றார்கள் என்றும், அவர்களுக்குள் இருக்கும் உறவின் தன்மை அதனால் எப்படி உள்ளது என்றும் ஒரு கருத்துக்கணிப்பை எடுத்துள்ளனர். அதனுடைய முடிவு நேற்று வெளியானது.
இந்த முடிவின்படி இரவு படுக்கையில் உடையில்லாமல் நிர்வாணமாக தூங்குவதையே விரும்புவதாக 57 சதவிகித தம்பதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நிர்வாணமாக தூங்கினால் படுக்கையறையில் தங்களுக்குள் எவ்வித கருத்துவேறுபாடுகளும் வருவதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நெருங்கிய நட்பும், வெளிப்படைத்தன்மையும் இதன்மூலம் தங்களுக்குள் பகிரப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் 48 சதவிகித தம்பதிகள் பைஜாமா போன்ற உடைகளை அணிந்து தூங்குவதாகவும், இதுவே தங்களுக்கு வசதியான உடையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு சிலர் நைட்டி போன்ற உடைகளை அணிவதாகவும், உடைக்கும் தங்களுடைய உறவு மேம்படுவதற்கும் சம்மந்தமில்லை என்றும் அது மனம் சம்மந்தப்பட்டது என்றும் கூறியுள்ளனர். இந்த கருத்துக்கணிப்பில் இருந்து படுக்கையறையில் தம்பதிகள் நிர்வாணமாக தூங்கினால் அவர்களுக்குள் எவ்வித கருத்துவேறுபாடின்றி ஒற்றுமையாக வாழலாம் என Cotton USA அமைப்பு தெரிவித்துள்ளது.
















