இலங்கையுடனான மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு- ராகுல்காந்தி

காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலங்கையுடனான மீனவர் விவகாரத்திற்கு முழுமையாக தீர்வு காணப்படும் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று வெளியிட்டு உரையாற்றுகையில் அவர் இதனை அறிவித்துள்ளார்

காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் நீட்தேர்வு முறை நீக்கப்படும் என கட்சியின் தலைவர் ராகுல்காந்தி உறுதியளித்துள்ளார்

கடந்த ஒரு வருடகாலமாக மக்களிடம் கருத்து கேட்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை உருவாக்கியுள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்

மக்களின் கருத்தை கேட்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிக்குமாறு உத்தரவிட்டிருந்தேன் ஒரு பொய் கூட இடம்பெறக்கூடாது என கேட்டிருந்தேன் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிக்கையில் பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!