மலேசியாவில் 13 வயதுடைய சிறுமியை சீரழித்த இந்திய தொழிலாளி: இரத்தம் சொட்ட நையப்புடைத்த பொதுமக்கள்..!

மலேசியாவில் 13 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஒரு இந்தியத் தொழிலாளியை பொதுமக்கள் நையப்புடைத்த காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேற்படி நபர், இந்தியாவிலிருந்து தொழில் நிமித்தம் மலேசியா சென்றுள்ளார். இந்நிலையில் 13 வயதுடைய சிறுமியை காதல் வலைவீசி, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளமை தெரிய வந்துள்ளது.

இதனை அறிந்த குடும்பத்தாரும், பொதுமக்களும், குறித்த சந்தேக நபரை பிடித்து, விசாரித்தபோது, ஆரம்பத்தில் மறுத்தாலும், பின்னர் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் பொதுமக்களால், கடுமையாக தாக்குதலுக்குள்ளான குறித்த நபர், உடலெங்கும் இரத்த காயங்களுடன் தனது பிழையை ஒப்புக்கொண்டுள்ளார். குறித்த நபர், ஆரம்பத்தில் தனது வயதை மாற்றி மாற்றி கூறவே, பொது மக்கள் கோபமடைந்துள்ளனர். இந்நிலையில் கடுமையாக தாக்கப்பட்ட சந்தேக நபர், இறுதியில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!