நீதி, பொறுப்புக்கூறல் இல்லாமல் சிறிலங்காவில் நிலையான அமைதி ஏற்படாது – பிரித்தானியா

AFP_17V4D5
நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் சிறிலங்காவில் நிலையான அமைதி ஏற்படாது என்று பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில், கரேத் தோமஸ் என்ற உறுப்பினர், பாரிய மனித உரிமை மீறல் குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்த தவறும் சிறிலங்கா மீது எடுக்கும் நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்து உரையாற்றிய பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் ஜெர்மி ஹன்ட்,

“ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்துக்கான அமைச்சர், சிறிலங்கா அரசாங்கத்துடன் தனது தொடர்புகளின் ஊடாக, ஒரு மகத்தான வேலைகளை செய்துள்ளார்.

இந்த விவகாரத்தை எழுப்புவது முற்றிலும் சரியாது. குறைந்தபட்சம், இதுபற்றி இந்த நாட்டில் வாழும் சிறிலங்கா சமூகத்தினர் பலர் அக்கறை கொண்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, சிறிலங்காவில் பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட இப்போது நல்ல நிலைமை காணப்படுகிறது.

எவ்வாறாயினும், நடந்த தவறுகள் தொடர்பான நீதியும், பொறுப்புக்கூறலும் இல்லாமல் அங்கு நிலையான அமைதி சாத்தியப்படாது” என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!