காணிகள் விடுவிப்பு பிரச்சினையை கைகழுவினார் ஜனாதிபதி!

வடக்கு – கிழக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பெருமளவான காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், மீதமாகவுள்ள காணிகள் தொடர்பான சிறிய பிரச்சினைகளை கீழ் மட்டத்தில் முடித்துக் கொள்ளலாம் எனவும் கூறி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த வசிவகாரத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி “வடக்கு கிழக்கில் 90 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டன. சிறியளவிலான பிரச்சினைகளே தற்போது எஞ்சியுள்ளன.இந்நிலையில், காணி விடுவிப்பு குறித்து தடைகள் எதுவும் இருந்தால் அதனை ஆளுநர், அரசாங்க அதிபர், படை தளபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதனை கையாளமுடியும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!