த.தே.கூ.வினரின் முடிவு தமிழர்களுக்கு இழைக்கும் பாரிய துரோகம் – அங்கஜன்

வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்கு எந்த விதமான நன்மையும் அற்ற வரவு – செலவு திட்டத்திற்கு முழுமையான ஆதரவளிப்பதற்கு தமிழ் பிரதிநிதிகள் தயாராகவுள்ளனர். இது அந்த மக்களுக்கு இழைக்கும் பாரிய துரோகம் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

இவ்வாறு தமது சுயலாபத்திற்காக அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்கள் ஜெனீவா சென்று தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றமை போலி நாடகமாகும். இதனை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுதந்திர கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!