பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்னர் உள்முரண்பாடுகளுக்கு தீர்வுகாண வேண்டும் :வாசுதேவ நாணயக்கார

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்னர் கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகளை சீர்செய்துகொள்ள வேண்டும்.

அதன் பின்னரே ஏனைய கட்சிகளுடன் இணைந்து பயணம் செய்வது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பில் சுதந்திர கட்சி கலந்து கொள்ளவில்லை. எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் எதிர்த்து வாக்களித்திருந்தனர்.

இந்த விடயம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன இணைந்து அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படும் கூட்டணியில் தாக்கம் செலுத்துமா என்பது தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு இதனை தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!