ஆண் மலைப்பாம்பை தொழில்நுட்ப உதவியுடன் பயன்படுத்தி பெண் மலைப்பாம்பை பிடித்த விஞ்ஞானிகள்

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாகாணத்தில், ஆண் மலைப்பாம்பின் உதவியுடன் 17 அடி நீளம் (5.2 மீற்றர்) கொண்ட பர்மீஸ் என்ற பெண் மலைப்பாம்பு ஒன்றை விஞ்ஞானிகள் பிடித்துள்ளனர்.

இந்த மலைப்பாம்பு ஒரு கட்டடத்தின் உயரமும் 64 கிலோகிராம் எடையும் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புளோரிடா மாகாணத்தில் சிக்கிய மிகப்பெரிய மலைப்பாம்புகளில் இதுவும் ஒன்று.

பிக் சைப்ரஸ் தேசிய வனப்பகுதியில், பறவைகள், முயல்கள் உட்பட சிறிய வகை விலங்குகள் அடிக்கடி மாயமாகி வந்தது. இதையடுத்து பர்மீஸ் என்ற பெண் மலைப்பாம்பு ஒன்று இந்த விலங்குகளை வேட்டையாடி வருவதை வனத்துறையினர் கண்டறிந்தனர். பின்னர் விஞ்ஞானிகளின் உதவியுடன் மலைப்பாம்பை பிடிக்க திட்டமிட்டனர்.

அதன்படி ஆண் மலைப்பாம்பு ஒன்றின் மீது ரேடியோ ட்ரேன்ஸ்மீற்றரை பொறுத்தி வனப்பகுதியில் விடப்பட்டது. அது பெண் மலைப்பாம்பு இருக்கும் இடத்தை நோக்கி சென்றது. இதையடுத்து ஆண் மலைப்பாம்பை பின்தொடர்ந்த விஞ்ஞானிகள் பெண் மலைப்பாம்பையும் அதன் 73 முட்டைகளையும் கைப்பற்றினர்.

பிடிபட்ட 17 அடி நீள மலைப்பாம்புடன் விஞ்ஞானிகள் 4 பேர் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறன்ஙமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!