மூக்குடைபடுவார் மைத்திரி! – சுமந்திரன்

பத­விக்­கா­லம் குறித்து மீண்­டும் உயர்­நீ­தி­மன்­றத்­தி­டம் ஜனாதிபதி தரப்பு அபிப்­பி­ரா­யம் கேட்க முய­லு­மா­யின் அது சுத்தப் பைத்­தி­யக்­கா­ரத்­த­ன­மான நட­வ­டிக்­கை­யா­கவே இருக்­கும் என்று, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் பத­விக்­கா­லம் எப்­போது முடி­வ­டை­யும் என்­பதை உயர்­நீ­தி­மன்­றத்­தி­டம் வினவ ஜனாதிபதி தரப்பு முஸ்­தீ­பு­களை எடுத்­துள்­ள­தாக செய்­தி­கள் வெளி­வந்­தி­ருப்­பது குறித்து சுமந்­தி­ரன் எம்.பியி­டம் கொழும்பு ஊட­கம் ஒன்று வின­வி­ய­போது அவர் மேலும் கூறி­ய­தா­வது:-

‘ஏற்­க­னவே உயர்­நீ­தி­மன்­றத்­தி­டம் இது­பற்றி ஜனாதிபதி வின­வி­னார். அதற்கு உரிய பதிலை உயர்­நீ­தி­மன்­றம் வழங்­கி­விட்­டது. அதன்­படி தேர்­தல் ஆணைக்­குழு உரிய நேரத்­தில் தேர்­தலை அறி­விக்­கும். அப்­ப­டி­யான நிலை­யில் மீண்­டும் உயர்­நீ­தி­மன்­றத்­தி­டம் அபிப்­பி­ரா­யம் கேட்­ப­தென்­பது அறி­வி­லித்­த­ன­மா­னது. முன்­னர் சொன்­னதை மீண்­டும் கேட்க வேண்­டுமா? 2015ஆம் ஆண்டு ஜன­வரி 9ஆம் திகதி அவ­ரது பத­விக்­கா­லம் ஆரம்­பிக்­கின்­றது. ஆறு வரு­டத்­துக்­குத் தெரி­வான மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் பத­விக்­கா­லம் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு ஐந்து வரு­ட­மாக குறைக்­கப்­பட்­டுள்­ளது. இது அடுத்த ஜனாதிபதிக்கா என்ற கேள்­விக்கே இட­மில்லை. என்­னைப் பொறுத்­த­வரை மீண்­டும் உயர்­நீ­தி­மன்­றத்­தி­டம் சென்று மூக்­கு­டை­ப­டும் செயற்­பா­டா­கவே இது இருக்­கப் போகின்­றது’ என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!