5 நாடுகளுக்கு தூதுவர் வெற்றிடம்!!

உலகின் முக்கிய 5 நாடுகளில் இலங்கை தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் பதவிகள் கடந்த சில மாதங்களாக வெற்றிடம் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

அயலுறவு அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரேசில் மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கான தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் பதவிகள் வெற்றிடமாகவுள்ளன.

இலங்கையின் அரசியல் பொருளாதாரம் மற்றும் அயலுறவுப் பிரிவுகளின் செயற்பாடுகளுக்கு மிக முக்கிய நாடாகக் கருதப்படும் ஐக்கிய அமெரிக்காவின் இலங்கை தூதுவர் பதவி கடந்த 9 மாதங்களாக வெற்றிடமாகவுள்ளது எனக் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!