மோடி பயணம் செய்த ஹெலிகாப்டரில் சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணி இடை நீக்கம்!

ஒடிசா மாநிலத்தில் பிரசாரத்திற்கு பிரதமர் மோடி பயன்படுத்திய ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அந்த மாநிலத்தின் சம்பல்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடிஹெலிகாப்டரில் சென்றார். அங்கு அவரது ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரி முகமது மோஷின் சோதனை நடத்தினார்.

இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் பிரதமர் மோடி புகார் செய்தார். அதைத்தொடர்ந்து ஒரு நபர் விசாரணை குழுவை தேர்தல் கமிஷன் ஒடிசாவுக்கு அனுப்பியது. விசாரணையின் முடிவில் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் அதிகாரி ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார். சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பை பெறும் பிரதமர் போன்றோருக்கு இத்தகைய சோதனையில் இருந்து விதிவிலக்களித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!