கோரிக்கைக்குப் போராட ஜப்பான் பேருந்து ஓட்டுனர்கள் கையாண்ட விநோத வழி!

ஜப்பானின் ஒகாயாமா நகரத்தை சேர்ந்த பேருந்து ஓட்டுனர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால், இந்த போராட்டம்வழக்கமானமுறையில்நடக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து பணிபுரிகிறார்கள், பயணிகளை வழக்கம்போல் ஏற்றிக்கொண்டு பேருந்தை இயக்குகிறார்கள். ஆனால், பயணிகளிடம் இருந்து கட்டணம் வசூலிப்பதை மட்டும் அவர்கள் செய்வதில்லை. ஒரு போட்டி நிறுவனத்திடமிருந்து கடுமையான சவாலை எதிர்கொள்வதன் காரணமாக அவர்கள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்திடமிருந்து பணிப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வாக்குறுதிகளை அளிக்க வலியுறுத்தி போராடுகின்றனர்.

இது போன்ற போராட்டம் ஏற்கனவே சிக்கலில் இருக்கும் பேருந்து நிறுவனத்தின் நிதியாதாரத்தை மோசமான நிலைக்கு இட்டுச்செல்லும் என்ற கருத்து எழுந்துள்ளது. ஆனால் இந்த இலவச சவாரி அந்நிறுவனத்துக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே உள்ள உறவைப் பேணுவதற்கும், அதன் மூலம் சந்தையில் நிலவும் போட்டியை சமாளிக்கவும் உதவுமென்று ஜப்பானிய செய்தித் தளங்கள் கூறுகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!