நெல்லியடிப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நாகராசா சுதாகரனும் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்ட பின்னரே மரணத்தை தேடிக் கொண்டிருக்கின்றார்.
“மறு பிறவி இருந்தால் மீண்டும் வருகிறேன் உன் மடியில் சாய்ந்து உயிர் பிரியும் என்றால்” என அவரது முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீட முதலாம் வருட மாணவனே இவ்வாறு பதிவிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தூக்கில் தொங்கிய நிலையில் பல்கலை மாணவன் சடலமாக மீட்பு; நெல்லியடியில் சம்பவம்
யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவனான நாகராசா சுதாகரன் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டில் இருந்து நெல்லியடி பொலிஸாரினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
















