தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தை அமைக்க உதவினார் கோத்தா

அடிப்படைவாதக் குழுவான தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையகத்தை கொழும்பில் அமைப்பதற்கு சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உதவியிருந்தார் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் குற்றம்சாட்டியுள்ளார்.

”இந்தக் குழுவையும் இதன் அடிப்படைவாத செயற்பாடுகளையும் கோத்தா 2014இலேயே அறிந்திருந்தார்.

அடிப்படைவாதக் கோட்பாடுகளைக் கொண்டவர்களுக்கான பல்கலைக் கழகம் ஒன்றை காத்தான்குடியில் அமைப்பதற்கான திட்டத்தை முன்னைய ஆட்சிக்காலத்தில் ஹிஸ்புல்லா முன்மொழிந்திருந்தார்.

இதற்கு இளைஞர். விவகார அமைச்சராக இருந்த டலஸ் அழகபெரும 2013 ஜூன் 11ஆம் நாள் கையெழுத்திட்டு பரிந்துரைத்திருந்தார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைமையகத்தை கொழும்பில் அமைப்பதற்கு காணி ஒன்றை அந்த அமைப்பை வலுப்படுத்த உதவினார்.

அடிப்படைவாத அமைப்புகள் வலுப்பெறுவது குறித்து முன்னைய அரசாங்கத்துக்கு அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபை எச்சரிக்கை செய்திருந்தது, ஆனாலும், அது கண்டுகொள்ளப்படவில்லை” என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!