உளவாளிகள் எனக்கூறி 2 பேரை கொடூரமாக கொன்ற மாவோயிஸ்டுகள்!

கரிகுண்டம் கிராமத்தில் நேற்று பிற்பகல் புகுந்த மாவோயிஸ்டுகள் சிலர், அங்கு வசித்து வந்த போடியம் முட்டா, கோகோ லச்சு ஆகிய இருவரை வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்தனர். பின்னர் அங்கு மக்கள் நீதிமன்றம் ஒன்றை உருவாக்கி, அதில் அவர்களை நிறுத்தி விசாரித்தனர்.

அவர்கள் இருவரும் போலீஸ் உளவாளிகள் என குற்றம் சாட்டிய மாவோயிஸ்டுகள், பின்னர் அவர்களை கிராமத்தினர் முன்னிலையிலேயே கொடூரமான ஆயுதங்கள் மூலம் கொன்றனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடினர். இந்த சம்பவம் சுக்மா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!