136 பயணிகளுடன் ஆற்றில் விழுந்த விமானம்

136 பயணிகளுடன் சென்ற போயிங் 737 விமானம் ஆற்றில் நிலை தடுமாறி விழுந்துள்ளது.

கியூபாவில் இருந்து 136 பயணிகள், 7 ஊழியர்களுடன் புறப்பட்டது போயிங் 737 விமானம். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஜாக்சன்வில் என்ற இடத்தில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கும் போது ஓடுபாதையின் இறுதியில் இருந்த செயிண்ட் ஜான் ஆற்றில் நிலை தடுமாறி விழுந்துள்ளது.

அமெரிக்க நேரப்படி நேற்றிரவு 9:40 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து ஜாக்சன்வில் மேயர் தனது ட்விட்டர் பக்கத்தில், விமானம் தண்ணீரில் மூழ்கவில்லை. பயணிகள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள்.இந்த விபத்தில் 21 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு வைத்தியவாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் நலமாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!