அமெரிக்காவில் விஷ மருந்தை காதலனுக்கு கொடுத்து கொன்ற காதலி!

அமெரிக்காவின் உட்டா பகுதியைச் சேர்ந்தவர் எல்லி வெய்ஸ்மேன் (43), இவர் 50 வயதுடைய நபருடன் காதல் வயப்பட்டு லிவ் இன் உறவுமுறையில் கடந்த சில வருடங்களாக வசித்து வருகின்றார். இவர் தனது காதலன் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக வினோதமான முறையை கையாண்டுள்ளார். கடந்த திங்கள் அன்றிரவு காதலன் வழக்கமாக குடிக்கும் மருந்து பாட்டிலில் டிரைனேஜ் சுத்தம் செய்யும் நச்சினை நிரப்பியுள்ளார். பின்னர் அதனை காதலனுக்கு கொடுக்கவே, அவரும் மருந்து என எண்ணி குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயங்கியுள்ளார். இதன் பின்னர் எல்லி, அவரை உடனடியாக அருகிலிருந்த கிளினிக்கிற்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பணிபுரிந்த ஊழியர் என்ன ஆனது என்று எழுப்பிய கேள்விக்கு அந்த பெண் அளித்த பதில் தான் வியக்கத்தக்கது.

அந்த பெண் என்ன செய்தாரோ அதை அப்படியே சிறிதும் பயமின்றி ஊழியரிடம் கூறியுள்ளார். இதனை கேட்ட கிளினிக் ஊழியர் உடனடியாக போலீசாருக்கு போன் செய்து நடந்ததை கூறியுள்ளார். கிளினிக்கிற்கு விரைந்த போலீசார் எல்லியை கைது செய்தனர். அவரது காதலனுக்கு உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லாத நிலையில் அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பின்னர் எல்லி மீது கொலை முயற்சி மற்றும் நச்சுபொருட்களை தவறாக பயன்படுத்தியது தொடர்பான பிரிவுகளில் வழக்கு போடப்பட்டு, சால்ட் லேக் கவுன்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!