முன்னாள் கூட்டமைப்பு எம்.பி பியசேனவுக்கு சிறைத்தண்டனை

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடிஅப்புஹாமி பியசேனவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று நான்கரை ஆண்டு கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பிரதமர் செயலக வாகனத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே அவருக்கு .இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

பிரதமர் செயலக வாகனத்தை திரும்பக் கையளிக்காமல் முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில், 2016 ஜூலை 29ஆம் நாள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவருக்கு வழங்கப்பட்ட வாகனத்தை, 2015 தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், திருப்பி அளிக்காமல் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

2010 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் இருந்து, தெரிவு செய்யப்பட்ட பியசேன, பின்னர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் இணைந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!