இன்று சிறப்பு விவாதம் – நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்­க­ர­வாத தாக்­கு­தலை அடுத்து நாட்டின் பாது­காப்பு நிலை­மைகள் குறித்து ஆராய இரண்டு நாட்கள் விசேட பாரா­ளு­மன்ற விவாதம் இன்றும் நாளையும் இடம்­பெறவுள்ளது. இன்று பாரா­ளு­மன்றம் கூட­வுள்ள நிலையில் நேற்று கட்­சித்­த­லை­வர்கள் கூட்டம் சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய தலை­மையில் பாரா­ளு­மன்ற கட்­டி­டத் ­தொ­கு­தியில் கூடி­யது.

இதன்­போது வழ­மை­யான நிகழ்ச்சி நிரலை ஒத்­தி­வைத்­து ­நாட்டின் நிலை­மைகள் குறித்து ஆராயும் வகையில் ஒருநாள் விவா­தத்தை நடத்த அனு­ம­திக்க வேண்டும் என எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை முன்­வைத்தார். எனினும் ஒருநாள் விவாதம் நடத்­து­வது சாத்­தி­ய­மற்­றது. ஆகவே இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் விவாதம் நடத்­தப்­பட வேண்டும், அதற்­கான ஒழுங்­கு­ப­டுத்­தல்­களை செய்­து­த­ர­ வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க கோரிக்கை முன்­வைத்தார்.

அனு­ர­கு­மார எம்.பி.யின் இந்தக் கோரிக்­கைக்கு சகல தரப்­பி­ன­ரும் ஆத­ரவு வழங்­கிய நிலையில் இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தி நாட்டின் தற்­போ­தைய பாது­காப்பு சூழல் குறித்து ஆராய இணக்கம் காணப்­பட்­டுள்­ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!