மைத்திரியின் கொள்கை விளக்கவுரை!!

எட்­டா­வது நாடா­ளு­மன்­றத்­தின் இரண்­டா­வது அமர்வை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஆரம்­பித்து கொள்கை விளக்க உரை­யாற்­றி­னார். அவ­ரது உரை முழு­மை­யாக வரு­மாறு:

2015 ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 1 ஆம் திகதி, எட்­டா­வது நாடா­ளு­மன்­றத்­தின் முத­லா­வது அமர்வை ஆரம்­பித்து வைத்து என்­னால் முன்­வைக்­கப்­பட்ட கொள்கை அறிக்­கை­யின் தொடர்ச்­சி­யா­கவே இன்­றைய இந்த அறிக்­கை­யை­யும் முன்­வைக்­கின்­றேன்.

தற்­போ­தைய அர­சுக்கு ஆணை­யைப் பெற்­றுக் கொடுத்த மக்­க­ளின் முக்­கிய வேண்­டு­கோ­ளாக இருந்த, இலங்கை சமூ­கத்தை மீண்­டும் ஜன­நா­யக மயப்­ப­டுத்தி மனித நேய­மும் பொறுப்­பும் மிக்க ஒரு சமூ­க­மாக உரு­வாக்க வேண்­டும் என்ற விட­யத்தை கடந்த மூன்று ஆண்­டு­க­ளுக்­குள் சிறந்த முறை­யில் அல்­லது நேர்த்­தி­யாக நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பதை விமர்­ச­னங்­க­ளுக்கு மத்­தி­யி­லும் நீங்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­வீர்­கள் என்று நான் நம்­பு­கி­றேன்.

7ஆவது நாடா­ளு­மன்­றம்
2015ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திகதி எனது தலை­மைத்­து­வத்­தின் கீழ் உரு­வாக்­கப்­பட்ட அர­சின் ஆட்­சிக் காலத்­தி­னுள் செயற்­பட்ட 7ஆவது நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட சில மக்­கள் நேய சட்ட திட்­டங்­கள் இருக்­கின்­றன.

2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறை­வேற்­றப்­பட்ட புகை­யிலை மற்­றும் போதைப்­பொ­ருள் தேசிய அதி­கார சபை­யினை நிறு­வு­வ­தற்­கான மாற்­றம் செய்­யப்­பட்ட சட்­ட­தி­ருத்­தம்

2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறை­வேற்­றப்­பட்ட தேசிய ஒள­டத சட்­டம்
2015ஆம் ஆண்டு மே மாதம் நிறை­வேற்­றப்­பட்ட அர­ச­மைப்­பின் 19 ஆவது சீர்­தி­ருத்­தம் ஆகி­யன இங்கு குறிப்­பி­டத் தக்­க­வை­யா­கும்.

இங்கே குறிப்­பி­டப்­பட்ட சட்ட திட்­டங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டமை நாடா­ளு­மன்ற வர­லாற்­றில் மிக முக்­கிய நிகழ்­வு­க­ளா­கும். அதற்கு அடித்­த­ள­மாக அமைந்த இரண்டு முக்­கிய விட­யங்­கள் மீது இங்கே எனது கவ­னத்தைச் செலுத்த விரும்­பு­கி­றேன்.

நாட்­டி­ன­தும் நாட்டு மக்­க­ளி­ன­தும் அபி­வி­ருத்­திக்­காக நாடா­ளு­மன்­றத்­தின் அனைத்துக் கட்­சி­க­ளும் எவ்­வித தடங்­கல்­க­ளும் இன்றி தேசிய இணக்­கப்­பாட்­டுக்­காக ஒன்­று­கூ­டி­யமை குறிப்­பி­டத்­தக்க விட­ய­மா­கும்.

2015ஆம் ஆண்டு ஜன­வரி முதல் ஜூன் மாதம் வரை­யில் செயற்­பட்ட 7 ஆவது நாடா­ளு­மன்­றத்­தின் அமைவு பற்றி நோக்­கும்­போது சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி உள்­ளிட்ட ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு 142 ஆச­னங்­கள் இருந்த அதே­வேளை நாடா­ளு­மன்­றத்­தின் தலைமை அமைச்­ச­ரைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்கு 47 ஆச­னங்­களே இருந்­தன.

எவ்­வா­றா­யி­னும் காலம் கால­மாக நாடா­ளு­மன்­றத்­தில் காணப்­ப­டு­கின்ற பகைமை அர­சி­யலை ஒரு­பு­றம் வைத்­து­விட்டு தேசிய தேவை­களை நிறை­வேற்­றும் வகை­யில் எமது நாட்­டின் அர­சி­யல் கட்­சி­க­ளுக்கு ஒன்­று­பட்டு செயற்­பட முடி­யும் என்­பது நிரூ­பிக்­கப்­பட்­டது.

இலங்கை சுதந்­தி­ரம் அடைந்­த­தன் பின்­னர் நாட்­டி­னுள் குவிந்து கிடக்­கின்ற தீராத தேசிய மட்­டத்­தி­லான பிரச்­சி­னை­ களைத் தீர்த்­துக் கொள்­ளும் வாய்ப்பு கலந்­து­ரை­யா­டல் மற்­றும் இணக்­கப்­பாட்­டி­னுள் காணப்­ப­டு­கின்­றது என்­பது இதன்­மூ­லம் நிரூ­பிக்­கப்­பட்­டது.
அதற்­க­மைய,

1. மூன்று தசாப்­தங்­க­ளுக்­கும் மேலாக யதார்த்­த­மாக்­கிக் கொள்ள முடி­யா­தி­ருந்த சேனக்க பிபிலே அவர்­க­ளின் ஒள­ட­தக் கொள்கை இன்று யதார்த்­த­மாகி இருக்­கின்­றது.

2. சிக­ரெட்­டின் தாக்­கம் பற்­றிய 80 சத­வீ­தம் படங்­க­ளி­லான எச்­ச­ரிக்கை, புதிய புகை­யிலை மற்­றும் போதைப்­பொ­ருள் சட்­டத்­தின் மூலம் செயற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

3. இலங்­கை­யின் அண்­மைக்­கால வர­லாற்­றில் ஓர் அர­சி­யல் விட­யத்துக்காக ஒன்று திரட்­டப்­பட்ட அதி­க­பட்ச எதிர்ப்பு நிறை­வேற்று அதி­கா­ரம் கொண்ட அரச தலை­வர் பத­விக்கு எதி­ரா­கவே எழுந்­தது. ஆயி­னும் அன்­று­மு­தல் இன்­று­வரை நிறை­வேற்று அதி­கா­ரத்தை எதிர்த்த எவ­ருமே அதன் அதி­கா­ரங்­களைக் குறைக்க முன்­வ­ர­வில்லை.

மாறாக அதன் அதி­கா­ரங்­களை தான்­தோன்­றித்­த­ன­மாக அதி­க­ரித்­துக் கொள்­வதே வழக்­க­மாக இருந்­தது. 2015 மே மாதம் 15 ஆம் திகதி உயர் நீதி­மன்­றத்­தின் பரிந்­து­ரைக்கு அமைய பொது வாக்­கெ­டுப்­புக்கு உட்­ப­டுத்­தாது குறைக்­கக்­கூ­டிய ஆகக்­கூ­டிய அதி­கா­ரங்­களை குறைக்க, அகற்ற முடிந்­தமை இந்த இணக்­கப்­பாட்டு அர­சி­ய­லின் உண்­மை­யான பல­மா­கும்.

பொரு­ளா­தா­ரம் சார்ந்த நட­வ­டிக்கை
ஜன­வரி 8 ஆம் திகதி ஆரம்­ப­மான அர­சி­யல் மாற்­றத்தை மேலும் யதார்த்­த­மாக்­கும் வகை­யில் 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடத்­தப்­பட்ட நாடா­ளு­மன்­றத்­தேர்­த­லின் பின்­னர் 8 ஆவது நாடா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வான பெரும்­பான்­மை­யான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக செயற்­பட்­டி­ருக்­கின்­றார்­கள் என்­ப­தை­யிட்டு அவர்­கள் மீதான மதிப்­புக் கலந்த நன்­றி­யு­டன் தெரி­விக்­கி­றேன்.

அந்­தக் காலப்­ப­கு­தி­யில் உங்­க­ளால் நிறை­வேற்­றப்­பட்ட சட்­ட­திட்­டங்­க­ளில் பெரும்­பா­லா­னவை நாட்­டின் பொரு­ளா­தா­ரத்தை முகா­மைத்­து­வம் செய்­ப­வை­யா­கவே அமைந்­தன. கடந்த மூன்று ஆண்­டு­க­ளில் முன்­வைக்­கப்­பட்ட இரண்டு ஒதுக்­கீட்­டுச் சட்­டங்­க­ளுக்கு மேல­தி­க­மாக பொரு­ளா­தார துறையைச் சார்ந்த 18 சட்­டங்­கள் உங்­க­ளால் நிறை­வேற்­றப் பட்­டி­ருக்­கின்­றன.

அந்த அனைத்து சட்­ட­திட்­டங்­க­ளும் எம்­முன் இருக்­கின்ற 10.3 ரில்­லி­யன் (பத்து லட்­சம் கோடி ரூபாவுக்கும் அதி­க­மான) மாபெ­ரும் கடன் சுமையை முகா­மைத்­து­வம் செய்­யும் நோக்­கி­லேயே ஆகும். அத்­தோடு நாட்­டின் வரு­மா­னத்தை அதி­க­ரிப்­ப­தற்கு தேவை­யான இன்­னும் பல சட்­ட­திட்­டங்­கள் அறி­மு­கப்­ப­டுத்தி வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

பேச்சுச் சுதந்­தி­ரத்தைப் பலப்­ப­டுத்­தும் வகை­யில் 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்­தில் விவா­திக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்ட தக­வல் அறி­யும் சட்­டம் இன்று குடி­மக்­க­ளுக்கு கிடைத்­தி­ருக்­கின்ற ஆசி­யா­வி­லேயே பலம்­மிக்க சட்­ட­மாகக் கரு­தப்­ப­டு­கின்­றது.

பொது வாக்­கு­ரி­மையை யதார்த்­த­மாக்­கும் வகை­யில் 2017 ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் நாம் எமது உள்­ளூ­ராட்சி தேர்­த­லுக்­கான திருத்­தச் சட்­டத்தை நிறை­வேற்­றி­யி­ருக்­கி­றோம்.

அத்­தோடு பேண்­தகு அபி­வி­ருத்­தியை யதார்த்­த­மாக்­கிக் கொள்­ளும் வகை­யில் 2017 ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் பேண்­தகு அபி­வி­ருத்­திச் சட்­டத்தை நிறை­வேற்­றிக்­கொள்ள முடிந்­தது.

இடைக்­கால நீதி மற்­றும் சக­வாழ்வை ஏற்­ப­டுத்­தும் நோக்­கில் காணா­மற்­போ­னோர் பற்றி கண்­ட­றி­யும் அலு­வ­ல­கம் பற்­றிய சட்­டம் மற்­றும் பாதிக்­கப்­பட்ட மற்­றும் குற்­ற­வி­யல் வழக்கு சாட்­சி­யா­ளர்­களை பாது­காக்­கும் நோக்­கில் அறி­மு­கப்­ப­டுத்தி வைக்­கப்­பட்ட சட்­டம் ஆகி­ய­வற்றை இங்கு குறிப்­பிட்டே ஆக­வேண்­டும்.

அர­சின் வெற்றி
அரசு தமது ஆட்­சிக் காலத்­தி­னுள் மக்­க­ளுக்­காகப் பெற்­றுக் கொடுத்­தி­ருக்­கும் பல வெற்­றி­க­ளைப் பற்றி இங்கு கவ­னத்­தில் கொண்­டு­வர வேண்­டு­மென நான் நம்­பு­கி­றேன்.

2010ஆம் ஆண்டு முதல் நாடு இழந்­தி­ருந்த ஜிஎஸ்பி வரிச்­ச­லு­கை­யை எம்­மால் பெற்­றுக்­கொள்ள முடிந்­தது. 6 ஆயி­ல­ரத்து 600 பொருள்­கள் தொடர்­பில் நாட்­டுக்கு நன்மை பயக்க முடிந்­தி­ருப்­ப­து­டன் மொத்த வரு­மா­னத்தை அதி­க­ரித்­துக்­கொள்ள முடிந்­தி­ருக்­கின்­றது. ஆடை மற்­றும் மீன் ஏற்­று­மதி இவற்­றுள் முத­லி­டம் வகிக்­கின்­றன. பெரு­ந­கர அபி­வி­ருத்தி மற்­றும் துறை­முக அபி­வி­ருத்தி திட்­டம் மீண்­டும் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

நீதித்­து­றை­யின் சுயா­தீ­னத் தன்மை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. சட்­ட­மும் உத்­த­ர­வு­க­ளும் எவ்­வித தாக்­க­மும் இன்றி நாட்­டி­னுள் செயற்­பட்டு வரு­கின்­றன. நாட்­டில் நீதி­யின் அதி­கா­ரம் நிலை­யாக்­கப்­பட்­டி­ ருக்­கின்­றது. சட்­டத்­துக்கு முர­ணான கைது­க­ளுக்­கான எந்த வாய்ப்­பும் இல்­லா­மல் ஆக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

குற்­றச் செயல்­கள் குறைவு
சட்­டம் மற்­றும் ஒழுங்கு பற்றி கவ­னம் செலுத்­தும்­போது 2014 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2018 ஆம் ஆண்டு வரை­யி­லான காலப் பகு­தி­யில் பார­தூ­ர­மான குற்­றச் செயல்­களை 30 சத­வீ­தத்­தால் குறைத்­துக்­கொள்ள முடிந்­துள்­ளது.

இலங்கை துறை­முக அதி­கா­ர­சபை 2017 ஆம் ஆண்­டில் 13 ஆயி­ரத்து 200 மில்­லி­யன் ரூபா தேறிய இலா­பத்தை ஈட்­டி­யி­ருக்­கின்­றது. 2016 ஆம் ஆண்­டின் தேறிய இலா­ப­மான ஆயி­ரத்து 100 மில்­லி­யன் ரூபா­வு­டன் ஒப்­பி­டும்­போது இது நூற்­றுக்கு நூறு சத­வீ­த­மான வளர்ச்­சி­யா­கும்.

துறை­முக துறை­யில் பொரு­ளா­தார மற்­றும் அபி­வி­ருத்தி ரீதி­யி­லான பல வெற்­றி­களை எம்­மால் ஈட்ட முடிந்­துள்­ளது. 2017 ஆம் ஆண்­டில் நாம் பெற்ற 15.1 பில்­லி­யன் அமெ­ரிக்­கன் டொலர் வரு­மா­னமே அண்­மித்த காலத்­தில் நாம் பெற்ற உய­ரிய ஏற்­று­மதி வரு­மா­ன­மா­கும்.

புதிய தொழில்­நுட்­பத்தை ஊக்­கு­விப்­ப­தற்­காக பாட­சா­லைத் துறை­யி­லும் அரச துறை­யி­லும் அனே­க­மான செயற்­திட்­டங்­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. வெளி­நாட்­டுத் தொழில், நாடு கடந்த உழைப்­பா­ளி­கள் ஆகிய துறை­க­ளுக்­கா­க­ வும்; நாம் மிக முக்­கி­ய­மான பல வச­தி­களைச் செய்து கொடுத்­தி­ருக்­கின்­றோம்.

கல்­வித்­துறை
2015 ஆம் ஆண்­டின் பின் கல்­வித்­துறை அபி­வி­ருத்­தி­யில் ‘அண்­மித்த பாட­சாலை சிறந்த பாட­சாலை’ செயற்றிட்­டம் மாண­வர் நலன்­புரித் திட்­ட­மான ‘சுரக் ஷ’ மாண­வக் காப்­பு­றுதி, கல்வி மறு­சீ­ர­மைப்பு, அனைத்துப் பிள்­ளை­க­ளுக்­கும் முத­லாம் ஆண்டு முதல் 13 ஆம் ஆண்டு வரை­யி­லான கட்­டாய தொடர் கல்­வியை பெற்­றுக் கொடுக்­கும் வேலைத்­திட்­டம், தேசிய கல்வி நிறு­வ­னத்தை மறு­சீ­ர­மைத்­தல், மும்­மொ­ழிக் கல்­வியை ஊக்­கு­வித்­தல் ஆகி­யன கல்­வித்­து­றை­யில் வளர்ச்­சியை காட்­டி­யி­ருக்­கும் துறை­க­ளா­கும்.

‘பிள்­ளை­களைப் பாது­காப்­போம்’ தேசிய வேலைத்­திட்­டம், முன்­பள்ளி மற்­றும் பகல் நேரத்­தில் குழந்­தை­கள் பரா­ம­ரிக்­கும் நிலை­யங்­க­ளின் மனித வள மற்­றும் அடிப்­படை வச­தி­கள் ஆகி­ய­வற்றை அபி­வி­ருத்தி செய்­தல், நிறை குறைந்த பிள்­ளைப் பேறு எண்­ணிக்­கை­யைக் குறைத்­தல் மற்­றும் தாய்­மா­ரின் போசாக்­குத் தன்­மை­யை உயர்த்­து­தல், வறிய பிர­தே­சங்­க­ளில் போசாக்­கின்­மை­யை குறைக்­கும் வகை­யில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பிர­தே­சங்­க­ளில் பிள்­ளை­க­ளுக்கு போசாக்கு மிக்க ஒரு­வேளை உணவை பெற்­றுக்­கொ­டுக்­கும் திட்­டத்தையும் நாம் ஆரம்­பித்­துள்­ளோம்.

பால்­நிலை வன்­மு­றை­யைக் குறைப்­ப­தற்­கான தேசிய செயற் றிட்­டம் தற்­போது மிக நேர்த்­தி­யாகச் செயற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. கிரா­மிய பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை நோக்­கா­கக் கொண்டு செயற்­ப­டும் செயற்றிட்­டங்­க­ளில் 25 சத­வீ­த­மான முத­லீடு பெண்­க­ளுக்­கா­கவே ஒதுக்­கப்­ப­டு­கின்­றது.

பேண்­தகு அபி­வி­ருத்தி
தேசிய வீட­மைப்பு அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டத்­தின் கீழ் முறை­யான வீட­மைப்பு அபி­வி­ருத்தி நிகழ்ச்­சித் திட்­டங்­களை எமது அரசு மிக வேக­மாக அதே­வேளை பெரிய வளர்ச்­சி­யை­யும் ஈட்­டி­யி­ருக்­கின்­றது. 2015 ஆம் ஆண்டு முதல் இது­வரை சுமார் 3 இலட்­சம் குடும்­பங்­க­ளுக்கு வீடு­களைப் பெற்­றுக்­கொ­டுக்க முடிந்­தி­ருக்­கின்­றது. அதிக பொரு­ளா­தார நெருக்­க­டியைக் கொண்­டுள்ள குடும்­பங்­க­ளுக்­காக எமது அர­சின் வீட்­டுத்­திட்­டம் மிகுந்த பலனை அளித்­தி­ருக்­கின்­றது.

பேண்­தகு அபி­வி­ருத்தி இலக்­கு­களை அடை­யும் பய­ணத்­தில் 2030 ஆம் ஆண்­ட­ள­வில் வறு­மை­யற்ற அதே­வேளை வயோ­திப மற்­றும் சிறப்­புத் தேவை உடை­யோ­ரின் உரி­மை­க­ளைப் பாது­காக்­கும் நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பும் பணி­யில் 2015 -– 2017 ஆம் கால எல்­லைக்­கான சேவை வழங்­கும் இலக்கு குழுக்­க­ளாக 9 வீத­மா­க­வுள்ள ஊன­முற்­றோர், 12.5 வீத­மான 60 வய­துக்­கும் கூடி­யோர், மொத்த சனத்­தொ­கை­யில் 12 வீத­மா­க­வுள்ள தனிப் பெற்­றோ­ரைக் கொண்ட குடும்­பங்­கள் மற்­றும் மொத்த சனத்­தொ­கை­யில் 25 வீத­மா­க­வுள்ள சமுர்த்தி உத­வி­பெ­று­வோர் ஆகி­யோர் கணிப்­பி­டப்­பட்­டுள்­ள­னர்.

மின்­சக்தி
மின்­சக்­தித் துறை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட அபி­வி­ருத்­தி­யில் சூரிய சக்தி செயற்றிட்­டம் மூலம் 150 மெகா­வோட்ஸ் மின்­சக்­தியை புதி­தாக தேசிய மின்­சக்தி கட்­ட­மைப்­புக்­குள் கொண்­டு­வர முடிந்­துள்­ளது. எதிர்­கா­லத்­தில் மின்­சா­ரத்­துறை சார்ந்த பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வாக கலப்பு மின் உற்­பத்தி திட்­ட­மொன்றை நாம் முன்­வைத்­துள்­ளோம். அதே­போல் இது­வரை எந்த அர­சி­னா­லும் கண்­டு­கொள்­ளப்­ப­டாத சுமார் 2 லட்­சத்து 75 ஆயி­ரம் குடும்­பங்­க­ளின் குப்பி லாம்பு வெளிச்­சத்­தில் கல்வி கற்­று­வந்த யுகத்தை நாம் முடி­வுக்கு கொண்­டு­வந்­தோம். அவர்­க­ளின் இல்­லங்­க­ளுக்கு அர­சின் செல­வில் மின்­சா­ரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

வறட்சி
புதுப்­பிக்­கத்­தக்க வலுச்­சக்தி அபி­வி­ருத்­திக்­காக முக்­கி­யத்­து­வம் வழங்­கு­வது விசேட அம்­ச­மா­கும். ஏனைய நாடு­கள் முகங்­கொ­டுக்­கும் கடும் கால­நிலை மாற்­றங்­க­ளுக்கு நாமும் முகம்­கொ­டுத்­துள்­ளோம். கடந்த பல ஆண்­டு­க­ளாக நில­விய வறட்­சி­யால் விவ­சாய உற்­பத்தி வீழ்ச்­சியை சந்­தித்­துள்­ள­து­டன் முன்­னி­ருந்த அர­சு­க­ளைப் போலேவே எமக்­கும் வெளி­நாட்­டி­லி­ருந்து அர­சியை இறக்­கு­மதி செய்ய நேர்ந்­தது.

மழை வீழ்ச்சி குறைந்து காணப்­ப­டு­வ­தால் விவ­சா­யத்­து­றை­யின் உற்­பத்தி மற்­றும் வரு­மா­னம் நூற்­றுக்கு முப்­பது வீதம் வீழ்ச்­சியை சந்­தித்­துள்­ள­து­டன் நீர் மின் உற்­பத்­திக்­கும் அது பெரி­ய­ளவு பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. விவ­சா­யி­கள் இர­சா­யன உரங்­களை தவிர்த்­து­விட்டு இயற்கை விவ­சா­யத்­தில் ஈடு­ப­டு­வதை ஊக்­கு­விக்­கும் பல தேசிய திட்­டங்­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

லக் சதொச விற்­பனை மையங்­கள் 300 இலி­ருந்து 400 வரை உயர்த்­தப்­பட்­டி­ருப்­ப­து­டன் அவற்­றி­னூ­டாக குறைந்த விலை­யில் பொருள்­கள் விற்­பனை செய்­யப்­ப­டு­கி­ன்றன. நுகர்­வோர் பாது­காப்பை உறு­தி­செய்­யும் வித­மாக நுகர்­வோர் சங்­கங்­கள் புதிய தோற்­றத்­து­டன் அறி­மு­கம் செய்­யப்­பட்­டுள்­ளன.

சுகா­தார சேவை
சுகா­தாரத் துறைக்­குள் இல­வச சுகா­தார சேவையை வலுப்­ப­டுத்­தும் வித­மாக வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க செயலை நாம் புரிந்­துள்­ளோம். பல்­வேறு தடை­களை சந்­தித்­த­வாறு 50 ஆண்­டு­க­ளுக்கு மேலாக மக்­க­ளின் எதிர்­பார்ப்­பாக இருந்த புதிய ஒள­ட­தக் கொள்­கையை நாம் நிறை­வேற்­றி­னோம். அத­னூ­டாக 48 அத்­தி­யா­வ­சிய மருந்து வகை­க­ளின் விலை­கள் குறைக்­கப் பட்­டுள்­ளன. ஒரு புற்று நோயா­ளி­யின் வாழ்­நாள் முழு­வ­தும் ஏற்­ப­டும் மொத்த மருத்­துவ செல­வை­யும் அரசு ஏற்­கும் கொள்­கையை முன்­வைத்­துள்­ளது.

இரு­தய நோயா­ளி­க­ளின் சத்­திர சிகிச்சை செல­வு­கள் அனைத்­தும் அரசு ஏற்­றுக்­கொள்­ளும் புதிய திட்­டம் முதன்­மு­றை­யாக எம்­மால் நிறை­வேற்­றப்­பட்­ட­து­டன் இரு­தய நோயா­ளி­க­ளுக்­கான ஸ்டென்ட் பொருத்­து­வ­தனை இல­வ­ச­மாக வழங்­கும் திட்­ட­மும் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டுள்­ளது. எமது வைத்­திய மற்­றும் தாதிச்­சே­வையை முதன்­மை­யா­கக் கொண்ட சுகா­தார துறை­யில் ஏற்­பட்­டுள்ள வளர்ச்சி தொடர்­பாக உலக சுகா­தார அமைப்­பின் பாராட்டை நாம் பெற்­றுள்­ளோம்.

எமது அரசு நிறை­வேற்­றிய தேசிய மதுக் கொள்கை தொடர்­பாக மகிழ்ச்­சி­ய­டைய முடி­யும். இனங்­கா­ணப்­ப­டாத சிறு­நீ­ரக நோய்­கள் தொடர்­பாக முக்­கிய அவ­தா­னத்தைச் செலுத்­து­வ­து­டன், உதவி தடுப்பு மற்­றும் மருத்­துவத் துறை­கள் விரிந்த தேசிய திட்­ட­மாக செயற்­ப­டுத்­தி­னோம்.

3 ஆயி­ரத்து 600 மில்­லி­யன் ரூபா செல­வில் சிறு­நீ­ரக நோயை இனங்­கா­ணு­வ­தற்­கான நீர் பரி­சோ­தனை மையங்­களை உரு­வாக்­கி­ய­து­டன், அந்­தத் திட்­டம் தற்­போது பேரா­தனை பல்­க­லைக்­க­ழக வளா­கத்­தி­னுள் இயங்­கி­வ­ரு­கி­றது. தொழில் மற்­றும் தொழில்­நுட்பத் துறை­யில் கல்வி கற்­கும் மாண­வர்­க­ளுக்­கான அனைத்­துப் பாட­நெ­றி­க­ளை­யும் இல­வ­ச­மாக கற்­ப­தற்கு 2017ஆம் ஆண்டு முதல் நாம் வாய்ப்பை வழங்­கி­யுள்­ளோம்.

தொழில்­நுட்ப மற்­றும் தொழில்­சார் கல்­வியை மேம்­ப­டுத்­து­வ­த­னூ­டாக புதிய பொரு­ளா­தா­ரத்தை உரு­வாக்­கும் பணிக்­கான மனி­த­வள மேம்­ப­டுத்­த­லுக்­கான முக்­கி­யத்­து­வத்தை வழங்­கி­யுள்­ளோம்.

வறுமை ஒழிப்பு
வறு­மையை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­காக சமுர்த்தி பெறு­ப­வர்­க­ளின் கொடுப்­ப­ன­வு­கள் இரண்டு மடங்­காக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. கிராம சக்தி மக்­கள் செயற்றிட்­ட­தி­னூ­டாக இந்த ஆண்டு மட்­டும் 2 ஆயி­ரம் கிரா­மங்­களை முன்­னேற்­று­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன. முதி­யோர் கொடுப்­ப­னவை அதி­க­ரிப்­பது மற்­றும் கர்ப்­பி­ணித் தாய்­மார்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் போசாக்குப் பொதிக்­கான கொடுப்­ப­னவு ரூபா 500 இலி­ருந்து 2 ஆயி­ரம் ரூபா வரை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

10 ஆண்­டு­க­ளுக்கு பின்­னர் அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளின் அடிப்­படை சம்­ப­ளம் 10 ஆயி­ரம் ரூபா­வால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. நீதி­மன்­றத் துறை­யில் சம்­ப­ளம் மற்­றும் கொடுப்­ப­ன­வு­கள் சிறப்பு அடிப்­ப­டை­யில் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. மஹா­பொல புல­மைப்­ப­ரி­சில் தொகை 2 ஆயி­ரத்து 500 ரூபா­வி­லி­ருந்து 5 ஆயி­ரம் வரை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. சிறு­நீ­ரக நோயா­ளி­க­ளுக்கு வழங்­கப்­பட்ட 3 ஆயி­ரம் ரூபா 5 ஆயி­ரம் ரூபா­வாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது.

கட்­டு­நா­யக்க வானூர்தி நிலை­யத்­தின் ஓடு­பாதை மிகக்­கு­று­கிய காலத்­தில் புதுப்­பிக்­கப்­பட்­ட­து­டன் உல­கி­லுள்ள மிகப்­பெ­ரிய வானூர்­தி­க­ளைத் தரை­யி­றக்­கும் வச­தி­கள் செய்­யப்­பட்­டுள்­ளன. சுற்­று­லாத்­துறை இலங்­கைக்­கான அந்­நிய செலா­வ­ணியை பெற்­றுத்­த­ரும் மூன்­றா­வது துறை­யாக விளங்­கு­கி­றது. ஒட்­டு­மொத்த அந்­நிய செலா­வணி வரு­மா­னத்­தின் 15 சத­வீ­தம் சுற்­று­லாத்­துறை மூல­மாக இன்று கிடைக்­கப்­பெ­று­கி­றது.

பாது­காப்­புத்­துறை
இரா­ணு­வத்­தி­ன­ருக்­கான ‘சத்­விரு, சங்­ஹிந்த’ இரா­ணுவ வீட­மைப்­புத் திட்­டம் 2017இல் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­ட­து­டன் இன்று அதில் 90 சத­வீத பௌதீக வளர்ச்­சியைக் காண­மு­டி­கி­றது. உபா­ய­மார்க்க தேசிய பாது­காப்பு தொடர்­பா­டல் திட்­டம் 2015 இல் ஆரம்­பித்­த­து­டன் அதன் வளர்ச்சி தொடர்­பாக மகிழ்ச்­சி­ய­டைய முடி­கி­றது.

அங்­க­வீ­ன­முற்ற இரா­ணு­வத்­தி­ன­ருக்­கான சிறப்பு சம்­ப­ளம் மற்­றும் கொடுப்­ப­னவு எம்­மால் வழங்­கப்­பட்­டுள்­ள­து­டன், அங்­க­வீ­ன­முற்ற முப்­படை வீரர்­கள் மற்­றும் வித­வை­க­ளுக்­கான ‘ரண­விரு பாது­காப்பு’ கொடுப்­ப­ன­வின் கீழ் அங்­க­வீ­ன­முற்ற இரா­ணு­வத்­தி­னர் மற்­றும் அவர்­க­ளின் மனை­வி­ய­ருக்­கும், கால­மான இரா­ணு­வத்­தி­ன­ரின் மனை­வி­ய­ருக்­கும் அவர்­க­ளின் வாழ்­நாள் வரை கொடுப்­ப­ன­வு­கள் வழங்­கும் திட்­டம், ஓய்­வூ­திய திணைக்­க­ளத்­தி­னால் நிறை­வேற்­றப்­ப­டு­கி­றது.
ஓய்­வூ­திய நிலு­வை­களை முறை­யாக செலுத்­தும் செயற்­பா­டு­கள் மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

வடக்கு -– கிழக்கு காணி விடு­விப்பு
அதே­போல் 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை­யான காலப்­ப­கு­தி­யில் வடக்கு, கிழக்கு பிர­தே­சங்­க­ளில் 40 ஆயி­ரத்து 475 ஏக்­கர் அரச மற்­றும் தனி­யார் காணி­கள் முப்­ப­டை­யி­ன­ரின் பயன்­பாட்­டி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டுள்­ளன.

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் மக்­க­ளுக்கு கிடைக்­கா­மல் போரின் போது இரா­ணு­வத்­தி­னர் பயன்­பாட்­டுக்­காக பயன்­ப­டுத்­திய காணி­க­ளில் 85 சத­வீத காணி­கள் தற்­போது விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. மகா­வலி அபி­வி­ருத்தி மற்­றும் சுற்­றா­டல் துறை­யின் கீழ் 10 ஆயி­ரம் காணி உறு­திப் பத்­தி­ரங்­கள் வழங்­கும் திட்­டம் 90 சத­வீ­தம் நிறை­வ­டைந்­துள்­ளது. .
பல தடை­க­ளுக்கு மத்­தி­யில் ஆரம்­பிக்­கப்­பட்டு, பெரிய தடை­க­ளு­டன் மிக மெது­வா­கவே செயற்­ப­டுத்­தப்­பட்ட மொர­க­ஹ­கந்த – களு­கங்கை நீர்ப்­பா­சன திட்­டத்­தில் பெரிய முன்­னேற்­றத்தை எம்­மால் அடைய முடிந்­துள்­ளது.

2015 முதல் புதிய துரி­தப்­ப­டுத்­தும் கட்­டிட கட்­டு­மா­னத்­திட்­ட­மொன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்­கும் தகுந்த செயற்­கு­ழுவை நிய­மிப்­ப­த­னூ­டாக பராக்­கி­ரம சமுத்­தி­ரம் போல் 6 மடங்கு பெரி­ய­தான மொர­க­ஹ­கந்த நீர்த்­தேக்­கத்­தின் கட்­டு­மா­னப் பணி­களை நிறை­வேற்றி, விவ­சா­யி­க­ளுக்கு நீர் விநி­யோ­கம் செய்­வ­து­டன் களு­கங்கை செயற்றிட்­டத்­தின் பணி­கள் தற்­போது நடை­பெற்று வரு­கின்­றன.

குளங்­கள் மறு­சீ­ர­மைப்பு
கால­நிலை மாற்­றத்­தால் ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­க­ளுக்கு முகங்­கொ­டுக்­கும் வித­மாக வறட்­சி­யால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக தேசிய விவ­சாய பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டுத்­தும் நோக்­கத்­து­டன், வட மத்­திய மாகா­ணத்­தின் கால்­வாய்­களை மேம்­ப­டுத்­தி­ய­து­டன் 800 சிறிய குளங்­க­ளை­யும் வடக்கு மாகா­ணத்­தில் ஆயி­ரத்து 400 சிறிய குளங்­க­ளை­யும் ஊவா மாகா­ணத்­தில் 350 சிறிய குளங்­க­ளை­யும் மறு­சீ­ர­மைக்­கும் திட்­டம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. 2 ஆயி­ரத்து 500 க்கும் மேற்­பட்ட சிறிய குளங்­களை ஒரே நேரத்­தில் மறு­சீ­ர­மைக்­கும் மிகப்­பெ­ரிய திட்­ட­மா­னது சுதந்­தி­ரத்­துக்­குப் பின் அர­சால் ஆரம்­பிக்­கப்­பட்ட முத­லா­வது பெரிய நீர்ப்­பா­சனத் திட்­ட­மா­கும்.

வட­மேல் மற்­றும் உலர்­வ­லய பகு­தி­க­ளில் நீர்­சார்ந்த பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தர முடிவை வழங்­கு­வ­தற்­காக வட­மேல் பெரிய கால்­வாய், வட­மத்­திய பெரிய கால்­வாய், மினிப்பே பெரிய கால்­வாய் என்று இலங்கை மக்­க­ளின் எதிர்­கால பயன்­பாட்­டுக்­காக பிர­மாண்ட நீர்ப்­பா­சனத் திட்­டங்­கள் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டுள்­ளன.

சுற்­றா­டல்
சுற்­றா­டல் பாது­காப்­பின் கீழ் பொலித்­தீன், பிளாஸ்­டிக் தொடர்­பில் கடும் சட்­டங்­களை நிறை­வேற்­றி­ய­து­டன், ஐக்­கிய நாடு­கள் ‘தூய்­மை­யான சமுத்­தி­ரம்’ திட்­டத்­தின் கீழ் தெற்­கா­சிய பிராந்­தி­யம் மற்­றும் பொது­ந­ல­வாய நாடு­கள் மத்­தி­யில் கண்­டல் தாவர பாது­காப்புக்கான முதன்மை நாடாக எமது நாடு விளங்­கு­கி­றது.

சுற்­றுச் சூழல் பாது­காப்பு தேசிய வேலைத்­திட்­டம் போதைப்­பொ­ருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்­சித்­திட்­டம் சிறு­நீ­ரக நோய் ஒழிப்பு தேசிய நிகழ்ச்­சித் திட்­டம், பிள்­ளை­க­ளைப் பாது­காப்­போம் தேசிய நிகழ்ச்­சித்­திட்­டம், பேண்­தகு பாட­சாலை திட்­டம் ஆகி­யவை 90 சத­வீத வளர்ச்­சியைக் காட்­டு­கி­றது. சுற்­றா­டல் மாசு கட்­டுப்­பாடு, கழிவு முகா­மைத்­து­வம், வன பாது­காப்பு, பேண்­தகு காணி முகா­மைத்­து­வம், சுற்­றுச் சூழல் விழிப்­பு­ணர்வு ஆகிய மேம்­ப­டுத்­தும் விட­யங்­க­ளுக்கு நாம் முக்­கி­யத்­து­வம் அளித்­துள்­ளோம். மக்­க­ளின் கடும் விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருந்த கழிவு முகா­மைத்­து­ வத்துக்கு நிரந்­தர செயற்றிட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

தடை­கள் வில­க­வில்லை
நான் இது­வரை குறிப்­பிட்­டது உங்­க­ளின் தலை­மைக்கு கீழ் 8 ஆவது நாடா­ளு­மன்ற, முத­லா­வது சபை அமர்­வில் தற்­போ­தைய அர­சால் பெற்­றுக்­கொண்­டுள்ள நாட்­டின் அர­சி­யல், பொரு­ளா­தார, சமூக மற்­றும் கலா­சார அபி­வி­ருத்­திக்­கும் குடி­மக்­க­ளின் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட சட்ட ரீதி­யான மற்­றும் வளர்ச்சி ரீதி­யான வெற்­றி­க­ளா­கும்.

இந்த வெற்­றி­கள் மூல­மாக இந்த நாடு ஜன­நா­யக மற்­றும் மனித நேய நாட்டு மக்­க­ளுக்கு பொறுப்புக் கூறும் அரச முறை­யொன்று மற்­றும் மக்­க­ளின் அடிப்­படைத் தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்­காக தேவை­யான நிரந்தர அடித்­த­ள­மொன்றை உரு­வாக்­கி­யுள்­ளோம் என்­ப­தில் எவ்­வித சந்­தே­க­மு­மில்லை. ஆனால் நாம் எதிர்­கொள்ள வேண்­டிய தடை­கள் வில­கிச் சென்­ற­தாகக் கருத முடி­யாது.

அர­சின் புதிய பய­ணப் பாதைக்குத் தேவைப்­ப­டும் விட­யங்­கள் தொடர்­பில் கவ­னத்தைச் செலுத்தி நாடு முகம்­கொ­டுத்­தி­ருக்­கும் 10 இலட்­சம் கோடி ரூபா­வுக்­கும் அதி­க­மான கடனை மக்­க­ள் மீது சுமத்­தா­மல் முகா­மைத்­து­வம் செய்­வது கட்­டா­ய­மா­க­வுள்­ளது. வறு­மை­யில் வாடும் மக்­களை வறு­மை­யி­லி­ருந்து மீட்­டெ­டுப்­பது, அரச சேவையை முறை­மைப்­ப­டுத்­து­வது மற்­றும் வினைத் திற­னா­ன­தா­க­வும் மாற்­று­வ­து­டன், நெகிழ்­வுத் தன்­மை­யு­டன் மக்­க­ளுக்குச் சேவையை வழங்­கு­வ­தற்­கான பணி­களை வலுப்­ப­டுத்­து­வ­தற்குத் தேவைப்­ப­டும் கொள்­கை­களை உரு­வாக்­கு­வதும், செயல் உபா­யங்­களை கண்­ட­றிந்து முகா­மைத்­துவ முடி­வு­களை எடுப்­ப­தும் இங்கு முதன்­மை­யா­ கும்.

முத­லா­வது கொள்கை
படித்த இளம் சமூ­கத்­தி­னர் மற்­றும் மக்­கள் விரும்­பும் துரித வளர்ச்­சிக்­காக நாம் அர்ப்­ப­ணிப்­பு­டன் செயற்­பட வேண்­டி­ய­தோடு அதை எதிர்­கா­லத்துக்காகத் தள்­ளி­வைக்க முடி­யாது. சிங்­கள, தமிழ், முஸ்­லிம், மலே மற்­றும் பறங்­கிய இனத்­த­வர் மற்­றும் ஆதி­வாசி மக்­க­ளுக்கு தங்­க­ளின் நியா­ய­மான வேண்­டு­கோள்­களை நிறை­வேற்­றிக்­கொள்­ளும் வாய்ப்­பு­களை நாம் உறுதி செய்ய வேண்­டும். அது இலங்­கை­யர் என்ற முறை­யி­லே­யா­கும்.

துரித பொரு­ளா­தார வளர்ச்­சிக்­காக அரச மற்­றும் தனி­யார் துறை­யின் செயற்­பங்­க­ளிப்பைப் பெற்­றுக்­கொள்­ளல், உற்­பத்­திப் பெருக்­கத்­தை­யும் போட்­டித் தன்­மை­யை­யும் அதி­க­ரித்­தல், நேரடி வெளி­நாட்டு முத­லீ­டு­கள் மற்­றும் ஏற்­று­மதி பொரு­ளா­தார வளர்ச்­சியை நோக்­காக கொண்ட வள முகா­மைத்­து­வம் அரச நிதி உறு­திப்­பாட்டை ஏற்­ப­டுத்­து­தல் அவற்­றுள் முதன்­மை­யா­கும்.

மேற்­கு­றிப்­பிட்ட அனைத்து சவால்­க­ளை­யும் வெற்­றி­கொள்ள செயற்­ப­டு­வது என்­ப­தன் அர்த்­தம் இலங்­கையை அனைத்து துறை­க­ளி­லும் வளர்ச்சி பெறும் நாடாக உரு­வாக்­கும் எமது முதல் கொள்­கையை நிறை­வேற்­றிக்­கொள்­வ­தே­யா­கும்.

இரண்­டா­வது கொள்கை
எமது இரண்­டா­வது கொள்கை அர­சி­யல் உறு­திப்­பாட்­டுக்­காக தேசிய மற்­றும் மத நல்­லி­ணக்­கத்தை பெற்­றுக் கொள்­வ­தா­கும். ஊழல் மற்­றும் மோச­டி­க­ளற்ற செயல்­வி­னை­மிக்க அரச தந்­தி­ரத்தை உரு­வாக்­கு­வது மூன்­றா­வது குறிக்­கோ­ளா­கும். எனது ஆட்­சிக்­கா­லத்­துக்­குள் மேற்­கு­றிப்­பிட்ட வெற்­றி­களைப் பெறு­வதே எனது ஒரே எண்­ண­மா­கும்.

என்­னால் 2015ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் முத­லாம் திகதி உங்­கள் முன் ஆற்­றப்­பட்ட தலைமை உரை­யின் சாரம் இது­வா­கும். அன்று நாம் கூறி­யது நீங்­கள் இது­வரை எந்­த­வித நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் முகம்­கொ­டுக்­காத மாற்­றத்­துக்­கான யுகத்­தின் படைப்­பா­ளி­கள் என்­றா­கும். மாற்­றத்துக்கான யுகம் எப்­போ­தும் கடு­மை­யான மற்­றும் விரும்­பத்­த­காத கால­கட்­ட­மா­கவே உலக வர­லாறு எடுத்­துக் காட்­டு­கி­றது.

புதிய தலை­மு­றைக்­கான இலக்கு
இன்று சகல இலங்கை மக்­க­ளும் சௌபாக்­கி­யத்­தின் சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொள்­ளவே எதிர்­பார்க்­கின்­ற­னர். இலஞ்­சம், ஊழல், மோசடி, வீண்­வி­ர­யம் என்­ப­வற்றுக்கு எதி­ராக செயற்­ப­டு­தல் தேசத்­தின் எதிர்­கா­லத்­துக்­கான தற்­பா­து­காப்­பா­கும். இன்று ஆரம்­ப­மா­கும் இந்தப் புதிய அமர்வை அந்த எதிர்­பார்ப்­புக்­களை அடை­வ­தற்கு கிடைத்­துள்ள ஒரு சந்­தர்ப்­ப­மா­கவே கரு­த­வேண்­டும்.

இலங்­கை­யில் ஆண்­டு­தோ­றும் பிறக்­கும் குழந்­தை­க­ளின் எண்­ணிக்கை சுமார் 3 லட்­சத்து 31 ஆயி­ரம் ஆகும். ஆண்­டு­தோ­றும் ஏற்­ப­டும் இறப்­பு­க­ளின் எண்­ணிக்கை ஒரு இலட்­சத்து 31 ஆயி­ரம் ஆகும். அதற்­கேற்ப எமது நாட்­டின் மொத்த சனத்­தொ­கை­யில் ஆண்­டு­தோ­றும் சுமார் 2 லட்­சம் அள­வில் அதி­க­ரிப்பு ஏற்­ப­டு­கின்­றது. எமது புதிய தலை­மு­றை­யி­ன­ருக்கு இலக்­கு­கள் காணப்­ப­டு­கின்­றன.

கல்­வி­மான்­க­ளுக்­கும் புத்­தி­ஜீ­வி­க­ளுக்­கும் இலக்­கு­கள் காணப்­ப­டு­கின்­றன. அதே­போல் நாட்­டுக்­கும் இலக்­கு­கள் காணப்­ப­டு­கின்­றன. அன்று நான் அர­சி­லி­ருந்து விலகி மக்­க­ளின் ஆசீர்­வா­தங்­க­ளு­டன் தற்­போ­தைய அரசை உரு­வாக்­கி­ய­மைக்கு தேசத்­தின் எதிர்­கா­ல­மும் எமது தாய் நாட்­டின் உன்­ன­த­மான குறிக்­கோள்­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட தீர்க்­க­மான உறு­தி­யான இலக்­கு­களை நிறை­வேற்­றக்­கொள்ள வேண்­டும் என்ற உறு­திப்­பா­டுமே கார­ண­மாக அமைந்­தது.

அதி­கார மோதல்­கள்
தற்­போது எமது நாடு பல்­வேறு கட்­சி­க­ளி­ன­தும் குழுக்­க­ளி­ன­தும் அர­சி­யல் பலத்தை உர­சிப் பார்ப்­ப­தற்கு பொருத்­த­மா­ன­வொரு சூழ்­நி­லை­யில் காணப்­ப­ட­வில்லை. நாட்­டின் முன் காணப்­ப­டும் சவால்­களை ஒன்­றி­ணைந்து வெற்­றி­கொள்ள வேண்­டிய நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது என்­பதை நான் வலி­யு­றுத்த விரும்­பு­கின்­றேன்.

அந்த முன்­னு­ரி­மை­களை யதார்த்­த­மாக்­கிக் கொள்­வ­தற்கு முத­லில் கூட்டு அர­சில் அங்­கம் வகிக்­கும் கட்­சி­க­ளுக்­கி­டையே காணப்­ப­டும் அதி­கார மோதல்­க­ளை­யும் இரண்­டா­வ­தாக அர­சுக்­கும் எதிர்க்­கட்­சிக்­கும் இடையே காணப்­ப­டும் அதி­கா­ரப் போராட்­டங்­க­ளை­யும் சம­னி­லைப்­ப­டுத்த வேண்­டும். தற்­போது காணப்­ப­டும் சக­ல­வித அதி­கார மோதல்­க­ளி­னா­லும் மக்­க­ளின் எதிர்­பார்ப்­புக்­களே பாதிப்­புக்கு உள்­ளா­கின்­றன.

மக்­கள் எதிர்­பார்ப்பு
மக்­க­ளின் எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்­றும், உண்­மை­யான மக்­கள் நேய செயற்றிட்­டங்­க­ளின் நிபந்­த­னை­க­ளாக பின்­வ­ரும் 15 விட­யங்­கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளன.
1. மக்­க­ளின் பொரு­ளா­தார சுபீட்­சத்தை உறு­திப்­ப­டுத்­தல்.
2. வறு­மையை இல்­லா­தொ­ழித்­தல்.
3. இளை­ஞர்­க­ளுக்கு புதிய தொழில்­வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­தல்.
4. அரச பணி­யா­ளர்­க­ளுக்கு திருப்­தி­க­ர­மான சூழலை ஏற்­ப­டுத்­தல்.
5. பொலிஸ் மற்­றும் முப்­ப­டை­யி­ன­ரின் தன்­னம்­பிக்­கை­யை­யும் உயர் குறிக்­கோள்­க­ளை­யும் உறு­திப்­ப­டுத்­தல்.
6. சட்­டம், அதி­கா­ரம், ஜன­நா­ய­கம், மனித உரி­மை­கள் மற்­றும் பேச்சு சுதந்­தி­ரத்தை சமூ­கத்­தில் உறுதி செய்­தல்.
7. தமிழ் மக்­க­ளின் சம உரி­மை­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட வேண­வாக்­களை ஏற்­றுக்­கொள்­ளல்.
8. முஸ்­லிம் மக்­க­ளின் நலன் மற்­றும் சமூக, கலா­சார தேவை­களை உறு­தி­செய்­தல்.
9. மலை­யக தமிழ் மக்­க­ளின் பொரு­ளா­தார, சமூக நிலையை மேம்­ப­டுத்­தல்.
10. நாட்­டின் பெரும்­பான்மை சமூ­க­மான சிங்­கள மக்­க­ளின் கலா­சார உரி­மை­களை பலப்­ப­டுத்தி, உறுதி செய்து தேசத்­தின் அடை­யா­ளத்தை வலுப்­ப­டுத்­தல்.
11. பெண்­களைப் பலப்­ப­டுத்­து­த­லும் அவர்­க­ளது நேரடி பங்­க­ளிப்­பும்
12. சமூ­கத்­தி­லுள்ள சிறப்­புத் தேவை­களை உடைய குடி­மக்­கள் தொடர்­பாக உணர்­வு­பூர்­வ­மாக செயற்­ப­டல்.
13. நாட்­டின் இயற்­கைச் சூழலைப் பாது­காக்­கும், தேசிய வளங்­களை எதிர்­கால சந்ததி­யி­ன­ருக்­கும் பெற்­றுத்­த­ரக்­கூ­டிய பேண்­தகு அபி­வி­ருத்­தியை உறு­தி­செய்­தல்.
14. சமய நம்­பிக்­கை­கள் எமது மர­பு­ரி­மை­கள் பாது­காக்­கப்­ப­டும் வகை­யில் சகல சமயப் பெரி­யார்­க­ளை­யும் மத குரு­மார்­க­ ளை­யும் மகா சங்­கத்­தி­ன­ரை­யும் பேண்­தகு முறை­யில் போசித்­தல்.
15. அர­சி­யல் பலப் பரீட்­சைக்கு அப்­பால் சென்று நாட்டை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­காக சகல இன, மத, அர­சி­யல், கட்­சி­களை ஒன்­றி­ணைத்து கட்­டி­யெ­ழுப்­பப்­ப­டும் தேசிய பேண்­தகு அபி­வி­ருத்தி இலக்கை உரு­வாக்­கு­தல்.

மேற்­கூ­றப்­பட்ட நிபந்­த­னை­க­ளின் கீழ் செயற்­ப­டும்­போது முழுமை மற்­றும் நுண் அபி­வி­ருத்தி உபாய மார்க்­கங்­க­ளி­னூ­டாக செயற்­பட வேண்­டி­ய­து­டன், அவற்­றின் வெற்­றிக்­காக கட்­ட­மைக்­கப்­பட்ட மாற்­றங்­க­ளும் அத்­தி­யா­வ­சி­ய­மா­கும் என குறிப்­பிட வேண்­டும்.

அதற்­க­மைய மக்­க­ளின் பிர­தி­நி­தி­க­ளான நீங்­கள் ஒன்­றி­ணைந்து மேற்­கூ­றப்­பட்ட நிகழ்ச்சி நிரலை நடை­மு­றைப்­ப­டுத்­து­ப­வர்­க­ளா­கவோ அல்­லது அதன் மேற்­பார்­வை­யா­ளர்­க­ளா­கவோ அல்­லது ஆலோ­ச­கர்­க­ளா­கவோ நிய­மிக்­கப்­ப­ட­லாம். இந்த ஒட்­டு­மொத்த செயற்­பாட்டை மேற்­பார்வை செய்­கை­யில் அபி­வி­ருத்திப் பெறு­பே­று­க­ளின் அடிப்­ப­டை­யில் அமைந்த அபி­வி­ருத்தி தொட­ராய்வு செயற்றிட்­டம் ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்த என்­னால் நட­வ­டிக்கை எடுக்­கக்­கூ­டி­ய­தாக அமை­யும்.

குற்­றச்­சாட்­டுக்­கள்
இந்த அரசு தொடர்­பாக பல்­வேறு தரப்­பி­னர்­கள் பல்­வேறு விமர்­ச­னங்­க­ளி­னால் குற்­றச்­சாட்­டுக்­க­ளை­யும் முன்­வைக் கின்­ற­னர். அவ்­வ­னைத்து விமர்­ச­னங்­கள் மற்­றும் குற்­றச்­சாட் டுக்­கள் தொடர்­பாக அரசு என்ற வகை­யில் நாம் மிகுந்த நேர்­மை­யோடு அவை தொடர்­பில் கவ­னம் செலுத்­து­வ­து­டன், அது தொடர்­பாக நாம் சுய விமர்­ச­னத்­தி­லும் ஈடு­பட்­டுள்­ளோம் என்­பதைத் தெரி­விக்க வேண்­டும்.

சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தும் நிறு­வ­னங்­க­ளின் சுயா­தீ­னத்­தன்­மையை ஏற்­க­னவே நாம் உறுதி செய்­துள்­ளோம். ஆயி­னும் இன்­னும் சுதந்­தி­ர­மாக உள்ள பெரி­ய­ள­வி­லான மோச­டி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டாமை தொடர்­பாக விமர்­ச­னங்­கள் காணப்­ப­டு­கின்­றன.

ஊழலை முற்­றாக இல்­லா­தொ­ழித்து சகல ஊழல்­வா­தி­க­ளுக்கு எதி­ரா­க­வும் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­தலே எமது ஏகோ­பித்த எதிர்­பார்ப்­பா­கும். அதுவே ஒட்­டு­மொத்த மக்­க­ளின் பிரார்த்­த­னை­யு­மா­கும்.

இறுதி வாய்ப்பு இதுவே
நாட்­டின் இரண்டு பிர­தான கட்­சி­க­ளும் ஒன்­றி­ணைந்து கூட்டு அரசை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளமை தொடர்­பான குற்­றச்­சாட்டே எம்­மீது சுமத்­தப்­ப­டும் மற்­று­மொரு குற்­றச்­சாட்டு ஆகும். நாட்­டுக்கு எதி­ராக உள்ள சவால்­களை கருத்­திற்­கொள்­ளும்­போது சகல கட்­சி­க­ளும் ஒன்­றி­ணைந்து நாட்டுக்காக முன்னோக்­கிப் பய­ணிக்க வேண்­டும். பெரி­ய­தொரு கடன் சுமை எம் முன்னே உள்­ளது. பய­னற்ற வீண்­வி­ர­யங்­கள் செய்­யப்­பட்ட யுகத்­தின் இழப்­பு­க­ளை­யும் நாம் நீக்க வேண்­டி­யுள்­ளது. அந்த வகை­யில் நாடு மீண்­டும் முன்­னேற்­ற­ம­டை­வ­தற்­குள்ள இறுதி சந்­தர்ப்­பம் இதுவே என்­பதை கருத்­திற்­கொண்டு சக­ல­ரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்­டும்.

வைராக்­கி­யம், குரோ­தம் நிறைந்த நாட்­டில் ஆட்சி மாற்­றங்­க­ளின்­போது இடம்­பெ­றும் பெரி­ய­ள­வி­லான அர­சி­யல் பழி­வாங்­கல்­கள் இல்­லாத, தோல்­வி­ய­டைந்­த­வ­ரும் வெற்­றி­யா­ள­ரும் அபி­மா­னத்­தோடு வாழக்­கூ­டிய சூழலை உரு­வாக்க வேண்­டி­ய­தும் இன்­றைய அர­சி­யல் கட­மை­யா­கு­மென நான் கரு­து­கின்­றேன்.

எமது உன்­ன­த­மான தாய்­நாட்டுக்கு நேர்­மை­யாக சேவை­யாற்­றி­னேன் என்ற உணர்வு எமது மன­சாட்­சி­யாக நாம் மறை­யும் வரை எம் மன­தில் எதி­ரொ­லிக்க கூடிய வகை­யில் செய­லாற்ற வேண்­டும் என்­பதே எமது எதிர்­பார்ப்­பாக அமைய வேண்­டும். அதற்­கான எமது எதிர்­கா­லத்துக்காக நாம் அர்ப்­ப­ணிப்­பு­டன் செயற்­ப­டு­வோம்.

இந்த அரசை அமைக்­கும்­போது எமக்கு எதி­ராக பல சவால்­கள் காணப்­பட்­டன. ஜன­நா­ய­கத்­தை­யும் சட்­டத்­தின் ஆதிக்­கத்­தை­யும் மீண்­டும் நிலை­நாட்­டு­வதே அவற்­றுள் முத­லா­வ­தா­கும். இனங்­க­ளுக்­கி­டையே நம்­பிக்­கை­யை­யும் ஒற்­று­மை­யை­யும் உறுதி செய்­தல் இரண்­டா­வ­தா­கும். பெரிய கடன் சுமை­யில் சிக்­கி­யி­ருந்த நாட்­டின் பொரு­ளா­தா­ரத்தை மீண்­டும் கட்­டி­யெ­ழுப்­பு­தல், நாம் இழந்­தி­ருந்த பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் நன்­ம­திப்பை பெற்­றுக்­கொள்­ளல் என்­ப­ன­வும் அவற்­றுள் உள்­ள­டங்­கு­கின்­றன.

எவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்­கள், விமர்­ச­னங்­கள் முன்­வைக்­கப்­பட்­ட­போ­தி­லும் இவ் அனைத்து துறை­க­ளி­லும் வெற்­றி­க­ர­மான பெறு­பே­று­களை பெற்­றுக்­கொள்ள கடந்த மூன்று ஆண்டு காலத்­துக்­குள் எமது அர­சால் முடிந்­துள்­ளது. அதே­போன்று இவ்­வ­னைத்துத் துறை­க­ளி­லும் மேலும் நிறை­வேற்­றப்­பட வேண்­டிய பல விட­யங்­க­ளும் காணப்­ப­டு­கின்­றன.

வெற்­றி­க­ர­மான பொரு­ளா­தா­ரம்
பல­மான, நவீன இலங்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு அத்­தி­யா­வ­சி­ய­மான முயற்­சி­யாண்மை முகா­மைத்­து­வத்­தில் நாட்டை ஈடு­ப­டுத்­த­லும் தேசிய வர்த்­தக சமூ­கத்துக்கும் உள்­நாட்டு மற்­றும் வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு கவர்ச்­சி­க­ர­மான கொள்­கை­களை உரு­வாக்­கு­த­லும் அவ­சி­ய­மா­கும். எமக்கு பழக்­கப்­பட்ட மோசடி அர­சி­யலை தோற்­க­டித்து சமூ­கத்­துக்கு நன்மை பயக்­கும் மக்­கள் நேய பொரு­ளா­தா­ரத்­தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக பாடு­பட வேண்­டி­யுள்­ளது. அனைத்து குடி­ம­க­னுக்­கும் வெற்­றி­பெ­றக்­கூ­டிய பொரு­ளா­தா­ரமே தேவைப்­ப­டு­கின்­றது.

எமது நாட்­டின் விவ­சாய மக்­க­ளைப் பற்­றிக் குறிப்­பிட வேண்­டும். மூன்று ஆண்­டு­க­ளாக தகுந்த மழை­யின்­மை­யால் நாட்­டின் மொத்த தேசிய உற்­பத்­திக்­கான விவ­சாயத் துறை­யின் பங்­க­ளிப்­பும் வீழ்ச்சி கண்­டுள்­ளது. அதிக மழை மற்­றும் நீண்­ட­கால வறட்சி ஆகி­யன பூகோள ரீதி­யில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் கால­நிலை மாற்­றங்­க­ளின் விளை­வா­கவே இருக்­கின்­றன. வறட்சி நில­விய காலத்­தில் அந்­தப் பிர­தேச மக்­க­ளுக்கு உணவை பெற்­றுத்­த­ரும் உத­வித்­திட்­டங்­கள் உள்­ளிட்ட உத­வித் திட்­டங்­களை செயற்­ப­டுத்­து­வ­தற்­காக 38 ஆயி­ரம் மில்­லி­யன் ரூபா செல­வி­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

இயற்­கை­யின் பாத­க­மான தாக்­கங்­க­ளி­லி­ருந்து மீண்டு உரிய முறை­யில் வெற்­றி­க­ர­மாக விவ­சா­யத்­து­றை­யில் ஈடு­ப­டு­வ­தற்குத் தேவை­யான வழி­யை நிர்­மா­ணித்­தல் அவ­சி­ய­மா­கும். விவ­சா­யத்­து­றைக்கு புதிய தொழில்­நுட்­பத்தை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு இன்­னும் நாம் போது­மான அளவு வெற்றி பெற்­றி­ருக்­கி­றோம் என்று மகிழ்ச்சி கொள்ள முடி­யாது. விவ­சாய உற்­பத்­தியை ஒழுங்­கு­ப­டுத்­து­தல், பகிர்ந்­த­ளித்­தல் ஆகிய துறை­களை நவீ­னப்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்­கி­றது.
அத்­தோடு நடுத்­தர வரு­மா­னத்தைப் பெறும் ஒரு நாடு என்ற வகை­யில் புதிய தொழில்­நுட்­பத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட கைத்­தொ­ழில்­துறை மீது கவ­னம் செலுத்த வேண்­டிய காலம் வந்­தி­ருக்­கின்­றது.

மாகா­ண­சபை முறை­மையை பலப்­ப­டுத்­தல்
நிலை­யான நாட்­டின் அடித்­த­ளம் தேசிய நல்­லி­ணக்­கமே ஆகும். உண்­மை­யான தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்­டு­மா­யின் சமத்­து­வத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட அர­சி­யல் தீர்­மா­னங்­களை இயற்­றத்­தக்க கட்­ட­மைப்பை அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டும். அந்த நோக்கை வெற்றி கொள்­வ­தற்கு தற்­போது செய­லில் இருந்­து­வ­ரும் மாகாண சபை முறை­மையை மேலும் பலப்­ப­டுத்­து­வது காலத்­தின் தேவை­யா­கும் என்று நான் நம்­பு­கி­றேன்.

எவ்­வா­றான விமர்­ச­னங்­கள் எழுந்த போதி­லும் வடக்கு – கிழக்கு மக்­க­ளின் பொறு­மை­யி­ழப்பை நிரந்­த­ர­மாக சம­ர­சப்­ப­டுத்த வேண்­டு­மா­யின் மக்­க­ளின் விருப்­பத்­தை­யும் இணக்­கப்­பாட்­டை­யும் பெற்ற அர­சி­யல் வேலைத்­திட்­ட­மொன்றை ஆரம்­பித்­தல் வேண்­டும். பௌதீக ரீதி­யில் நாம் பயங்­க­ர­வா­தி­களை தோற்­க­டித்த போதி­லும் அவர்­க­ளின் கொள்­கை­யை முழு­மை­யாக தோல்­வி­யு­றச் செய்­வ­தற்கு இன்­னும் முடி­யாது போயி­ருக்­கின்­றது. கடந்த மூன்­றரை ஆண்­டு­க­ளாக பன்­னாட்டு ரீதி­யி­லான ஒத்­து­ழைப்பைப் பெற்று அந்­தக் கொள்­கை­யை தோல்­வி­யு­றச் செய்­வ­தற்கே நான் முயற்­சித்து வந்­தேன்.

சக­வாழ்வு
போரின் பின்­ன­ரான நில­மை­களை கையாள்­வ­தென்­பது மிகுந்த சவா­லா­கும் என்­பதை நாம் ஏற்­றுக்­கொள்ள வேண்­டும். நாம் அரசைப் பொறுப்­பேற்ற சம­யம் அந்­தச் சவா­லுக்­கான விடை­தே­டும் காரி­யம் ஏழு ஆண்­டு­க­ளால் தாம­த­மாகி இருந்­த­த­னால் அந்­தச் சவால் மேலும் இக்­கட்­டான சூழ்­நி­லைக்கு உள்­ளா­கி­யி­ருந்­தது. மூன்று தசாப்­தங்­க­ளாக சமூ­கத்­தில் வேரூன்­றி­யி­ருந்த போர் மன­நி­லை­யை அகற்றி சக­வாழ்வை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இன்­னும் எம்­மால் பெரிய வேலை­களைச் செய்­ய­வேண்டி இருக்­கின்­றது. அர­சி­னால் மாத்­தி­ரம் அதனைச் செய்­வது கடி­ன­மா­கும். அதற்கு சமூ­கத்­தின் அனைத்துத் தரப்­பு­க­ளி­ன­தும் நேர­டிப் பங்­க­ளிப்பு கட்­டா­ய­மா­கத் தேவைப்­ப­டு­கின்­றது. அந்த நோக்கை அடை­வ­தற்­காக நாம் அனை­வ­ரும் ஒன்­று­பட்டு செயற்­ப­டு­வோ­மென அனைத்து தரப்­பு­க­ளுக்­கும் அழைப்பு விடுக்­கின்­றேன்.

பாது­காப்பு
தேசிய பாது­காப்பு மீதான எமது கவ­ன­மும் இங்கு முக்­கி­யத்­து ­வம் பெறு­கின்­றது. எமது பூமி­யின் பாது­காப்பு மனி­தர்­க­ளின் பாது­காப்பு, சைபர் பாது­காப்பு ஆகி­யன இங்கு முக்­கிய துறை­க­ளாக அமை­கின்­றன. பூமி­யின் பாது­காப்­பின் கீழ் கடல் பரப்பு மீதும், மனி­தப் பாது­காப்­பின் கீழ் உணவு மற்­றும் நீர்ப் பாது­காப்பு ஆகி­ய­ன­வும் முக்­கி­யத்­து­வம் பெறு­கின்­றது. இந்து சமுத்­தி­ரத்­தின் கேந்­திர இடத்­தில் இலங்கை அமைந்­தி­ருப்­ப­தால் எமக்கு மிகுந்த முக்­கி­யத்­து­வம் கிடைக்­கப் பெற்­றி­ருக்­கின்­றது.

அதே­போல் நாம் எதிர்­கால நோக்­கு­டன் மிக நுட்­ப­மாக கவ­னத்­திற் கொள்ள வேண்­டிய பாது­காப்புத் துறை சவால்­க­ளும் இருக்­கவே செய்­கின்­றன என்­பதை நாம் எமது கவ­னத்­தில் கொள்­ளு­தல் வேண்­டும். பன்­னாட்டு உற­வு­களை பேணு­வ­தில் நடு­நி­லை­யான, நட்பு ரீதி­யி­லான கொள்­கை­யின் முக்­கி­யத்­து­வத்தை இங்கு வலி­யு­றுத்த விரும்­பு­கி­றேன். எமது நட்பு ரீதி­யி­லான வெளி­நாட்­டுக் கொள்­கையே எமக்கு மிகுந்த பல­னைப் பெற்­றுத் தந்­தி­ருக்­கின்­றது. உல­கில் அனைத்து நாடு­க­ளைப் போன்றே ஐக்­கிய நாடு­கள் சபை முத­லான பன்­னாட்டு அமைப்­பு­க­ளு­டன் நாம் மிகுந்த நட்­பை­யும் தோழ­மை­யை­யும் உரு­வாக்­கிக்­கொள்­வ­தற்கு வேறொரு சந்­தர்ப்­பம் இல்லை என்றே கூற­லாம்.

முதிர்ச்சி இல்லை
2015ஆம் ஆண்டு; நான் தலை­மை­யேற்ற யுக மாற்­றம் இன்­னும் நிறை­வ­டை­ய­வில்லை. அன்று அது இலங்­கைக்கு புதி­ய­தோர் அனு­ப­வ­மாக அமைந்­தி­ருந்­தது. 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட மாதம் முதல் கூட்டு அரசை உரு­வாக்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தா­லும் அதற்­கான அர­சி­யல் மற்­றும் சமூக முதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­திக்­கொள்­ள­வில்லை என்­பது கடந்த மூன்­றாண்­டுக்­குள் ஏற்­பட்ட சம்­ப­வங்­கள் ஊடாக மீண்­டும் மீண்­டும் நினை­வு­ப­டுத்­தப்­பட்டு கொண்­டி­ருக்­கின்­றது. ஒப்­பந்த ஜன­நா­ய­கம் மற்­றும் உரை­யா­டல் ஜன­நா­ய­கம் ஆகி­ய­வற்றை இன்று பல நாடு­கள் தனது ஆட்­சி­யின் அடிப்­ப­டை­யாக கொண்டு செயற்­பட்­டா­லும் எமக்கு அவ்­வ­கை­யான எண்­ணக்­க­ருக்­கள் புதி­ய­தா­கவே உள்­ளன.

நிகழ்­கால அர­சி­யலைப் பார்­வை­யி­டும்­போது எதிர்க்­கட்­சி­யின் செயற்­பாடு வேறொரு வழி­யில் செல்ல வேண்­டி­யுள்­ள­து­டன், கூட்டு அர­சுக்­குள் சகோ­தர கட்­சி­க­ளின் நட­வ­டிக்­கை­க­ளில் மாற்­றம் தேவை­ப்பட்­டுள்­ளது. தேசிய ஆட்சி ஒன்­றுக்­கொன்று வித்­தி­யா­ச­மான கோணங்­க­ளைக் கொண்ட கட்­சி­க­ளின் இணைப்­பால் உரு­வா­கி­யுள்­ளது. அந்த கட்­சி­கள் அனைத்­தும் புத்த பக­வான் காட்­டிய வழி­யில் செல்­ல­வேண்­டி­ய­து­டன் வஜ்­ஜீன் சமூ­கத்­தி­ன­ரைப் போல ஒற்­றுமை மற்­றும் பேச்சு முதன்­மை­யாக வைத்து அவர்­கள் பின்­பற்­றிய வழி­களை நாமும் பின்­பற்­று­வோம். அரச தலை­வர் என்ற வகை­யில் கடந்த மூன்­றாண்­டு­க­ளாக நான் இவ்­வாறே செயற்­பட்­டேன்.

அது நாட்­டின் ஒட்­டு­மொத்த மக்­க­ளின் வெற்­றிக்குக் கார­ண­மாக அமை­யும் என்­பதை நான் உறு­தி­யாக நம்­பு­கி­றேன். இறு­தி­யாக நாம் அர­சாக எழுந்து நிற்­ப­து­டன், பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை பெற்­றுக்­கொள்­கை­யில், எமது உரி­மை­கள் போலவே, தேசி­யத்­தன்மை, கலா­சா­ரம், எமது விதி­மு­றை­கள் ஆகி­ய­வற்றை வலு­வான அர­சி­யல் சிந்­த­னை­யு­டன் செய­லாற்ற வேண்­டு­மென்று கூறிக்­கொள்ள விரும்­பு­கி­றேன். பொது­மக்­க­ளின் அர­சி­யல் இத­யத் துடிப்பை உணர்ந்து செயற்­ப­டு­வதை நாம் நோக்­கா­கக்­கொண்டு இலங்­கையை வெற்­றி­பெற்ற அர­சாக கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு வரு­மாறு அழைப்பு விடு­வ­து­டன் நாட்­டுக்­கும் நாட்டு மக்­க­ளுக்­கும் வெற்றி கிடைக்­க­வேண்­டு­மென்று பிரார்த்­தனை செய்­கி­றேன் -– என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!