கொரிய நாடுகளின் இணக்­க­மும் பிணக்­க­மும்!!

1953 ஆம் ஆண்டு கொரி­யப் போர் முடிந்த பின்­னர், தென் கொரி­யா­வுக்­குள் நுழைந்த வட­கொ­ரி­யா­வின் முத­லா­வது அதி­பர் என்ற சிறப்­பைப் பெற்­றுள்­ளார் வட­கொ­ரிய அதி­பர் கிம் ஜோங் உன். ஆனால், இதற்கு ஏன் இவ்­வ­ளவு காலம் ஆனது? இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான பிரச்­சினை எப்­போது ஆரம்­பித்­தது? 1948ஆம் ஆண்­டு­வரை ஒரே நாடாக இருந்த கொரியா ஏன் பிரிய நேரிட்டது? நீண்ட மற்­றும் சிக்­க­லான இந்த வர­லாறு, இரண்­டாம் உல­கப் போரின் முடி­வில் தொடங்­கி­யது.

கொரி­யப் போரின் ஆரம்­பம்?
மேற்குலக நாடுகள் மற்­றும் சோவி­யத் ஒன்­றி­யம் என்பவற்றுக்கு இடையே நடந்த பனிப்­போ­ரின் நேரடி விளை­வாக, 1950ஆம் ஆண்­டு­க­ளில் கொரி­யத் தீப­கற்­பத்­தில் போர் வெடித்­தது. ஒரே நாடாக இருந்த கொரி­யாவை, 1910 முதல் இரண்­டாம் உல­கப்­போ­ரின் முடிவு வரை ஜப்­பான் ஆண்­டது. போரின் முடி­வில் ஜப்­பான் சர­ண­டைந்­ததை சிறந்த வாய்ப்­பா­கப் கருதிய சோவி­யத் ஒன்­றி­யம், கொரி­யா­வுக்­குள் நுழைந்­தது.

1948ஆம் ஆண்டு கொரி­யா­வைப் பிரிக்க சோவி­யத் ஒன்­றி­ய­மும், அமெ­ரிக்­கா­வும் ஒப்­புக்­கொண்­டன. சோவி­யத் ஒன்­றி­யம் வட கொரி­யா­வை­யும், அமெ­ரிக்கா தென் கொரி­யா­வை­யும் தமது கட்­டுப்­பாட்­டில் எடுத்­துக்­கொண்­டன.

வட­கொ­ரி­யா­வில் ஒரு கம்­யூ­னிச சர்­வா­தி­கா­ரத்தை நிறு­விய சோவி­யத் ஒன்­றி­யம், முன்­னாள் கெரில்லா படை வீர­ரான கிம் இல்-­­­சூங்­கி­டம் (கிம் ேஜாங்-­­­உன்­னின் தாத்தா) அதி­கா­ரத்தை ஒப்­ப­டைத்­தது. ஜன­நா­யக தேர்­தல் நடந்த தென்­கொ­ரி­யா­வில், சைங்­மேன் ரீ அந்த நாட்­டின் முதல் அதி­ப­ரா­கப் பதவி ஏற்­றார். சோவி­யத் ஒன்­றி­ய­மும், அமெ­ரிக்­கா­வும் 1949ஆம் ஆண்­டில் கொரி­யாவை விட்டு வெளி­யே­றி­ன.

ஒரு வரு­டம் கழித்து, எதிர்­பா­ரா­த வி­த­மாக தென் கொரியா மீது கிம் இல்-­­­சூங் தாக்­கு­தல் நடத்­தி­னார். ஒரு ஐக்­கி­யப்­பட்ட கம்­யூ­னிச கொரி­யாவை உரு­வாக்க வேண்­டும் என்­பது அவ­ரது குறிக்­கோ­ளாக இருந்­தது. வட­கொ­ரி­யா­வி­டம் மிகப்­பெ­ரிய ராணு­வம் இருந்­தது. இதற்கு அவர்­கள் சோவி­யத் ஒன்­றி­யத்­திற்கு நன்றி சொல்ல வேண்­டும்.

தென்­கொ­ரி­யா­வுக்கு உத­வு­வ­தற்­காக அமெ­ரிக்­கப் படை­யும் வந்­தது. ஐ.நா. பாது­காப்­புக் குழு­வி­டம் விடுக்­கப்­பட்ட வேண்­டு­கோளை அடுத்து, ஆஸ்­தி­ரே­லியா, பிரான்ஸ் மற்­றும் பிரிட்­டன் உள்­ளிட்ட 14 ஐ.நா உறுப்பு நாடு­க­ளி­டம் இருந்­தும் தென்­கொ­ரி­யா­வுக்கு ஆத­ர­வாக படை­கள் வந்­தன.

போரை நிறுத்த அணு ஆயு­தம் பயன்­ப­டுத்­தப்­ப­டும் என அப்­போ­தைய அமெரிக்க அதி­பர் ட்வைட் ஐச­னோ­வர் மிரட்­டி­ய­தால், போர் நிறுத்த ஒப்­பந்­தம் 1953ஆம் ஆண்­டில் கையெ­ழுத்­தா­னது. அதே ஆண்­டில் சோவி­யத் ஒன்­றி­யத் தலை­வர் ஜோசப் ஸ்டாலி­னின் சாவும் போர் நிறுத்­தத்­துக்­குப் பங்­க­ளித்­தது.

இறுதி அமைதி ஒப்­பந்­தம் ஏற்­ப­டும் வரை­யில், ஒரு தற்­கா­லிக போர் நிறுத்­தம் வேண்­டும் என்­ப­தற்­காக எட்­டப்­பட்ட இந்த உடன்­ப­டிக்­கை­யால், அப்­போது போர் ஓய்ந்­தது. ஆனால் தீர்வு இன்­னும் வர­வில்லை. அத­னால்­தான் இரண்டு கொரியத் தலை­வர்­க­ளுக்­கி­டை­யி­லான அண்மைய சந்­திப்பு மிக முக்­கி­ய­த்துவம் பெறுகிறது.

இரண்டு நாடு­க­ளும்
எப்­படி வேறு­ப­டு­கின்­றன?
தென் கொரி­யா­வி­லும் வட­கொ­ரி­யா­வி­லும் தின­சரி வாழ்க்கை மிக­வும் வித்­தி­யா­ச­மாக இருக்க முடி­யாது. மேற்­கு நாடுகளது படை­க­ளால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட தென்­கொ­ரியா, முத­லா­ளித்­துவ தத்­து­வத்தை ஏற்­றுக்­கொண்­டது. ஆசி­யா­வின் மிகச் செல்­வச் செழிப்­பான நாடு­க­ளில் ஒன்­றா­கத் தென் கொரியா வளர்ந்­துள்­ளது.

1960களில் அர­சால் ஊக்­கு­விக்­கப்­பட்ட தொழிற்­து­றை­யால், சாம்­சங், ஹூண்­டாய் போன்ற பெரிய நிறு­வ­னங்­க­ளும் உரு­வா­கின. தென்­கொ­ரிய கலா­சா­ரம் உல­கம் முழு­வ­தும் பர­வி­யது. தென்கொரிய கலைஞர்கள் தயா­ரித்த நாட­கங்­கள் மிக­வும் பிர­ப­ல­மா­யின. நாட்­டின் 48 மில்­லி­யன் மக்­கள் தொகை­யில், 45 மில்­லி­யன் மக்­க­ளுக்கு, அதிக வேக­மான வயர்­லெஸ் இணை­யம் இருப்­ப­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அனைத்து வகை­யான பொருள்­க­ளும் இங்கு மக்­க­ளுக்­கு தட்டுப்பாடின்றிக் கிடைக்­கும்.

வட­கொ­ரி­யா­வைப் பற்றி
தென்­கொ­ரிய மக்­க­ளி­டம்
என்ன கற்­பிக்­கப்­ப­டு­கி­றது?

‘‘வட கொரியா எமது முக்­கிய எதிரி நாடு என்­றும், அதே சம­யம் எமது சக நாடு என்­றும் எங்­க­ளுக்­குக் கற்­பிக்­கப்­ப­டு­கி­றது’’ என்­கி­றார் தென்கொரிய யு டியூப் பதி­வா­ளர் பில்லி. வட­கொ­ரியா ஒரு கம்­யூ­னிச நாடு. ஆனால், முத­லா­ளித்­து­வம் அந்த நாட்­டில் ஊடு­ருவி வரு­கி­றது.

வட­கொ­ரி­யா­வில் வாங்­கு­வ­தற்­குப் பொருள்­கள் உள்­ளன. ஆனால், அது பணம் வைத்­தி­ருப்­ப­வர்­க­ளுக்கு மட்­டுமே. பெரும்­பா­லான வட­கொ­ரிய மக்­கள் வறு­மை­யில் வாழ்ந்து வரு­கின்­ற­னர். நாட்­டின் உயர் தலை­வரே எமக்கு முக்­கி­யம் என அந்த நாட்டுக் குடி­மக்­க­ ளுக்குச் சிறு­வ­யது முதலே கற்­பிக்­கப்­ப­டு­கி­றது. அத்­து­டன் தென்­கொ­ரியா, அமெ­ரிக்கா போன்ற நாடு­க­ளும் மற்­றும் மேற்­கு­லக நாடு­க­ளும் தீயவை என மக்­க­ளுக்­குக் கற்­பிக்­கப்­ப­டு­கி­றது.

முறை­கே­டு­கள்
சித்­தி­ர­வதை, பாலி­யல் துர்­ந­டத்தை, கட்­டாய கருக்­க­லைப்பு மற்­றும் பட்­டினி என மனி­தக்­கு­லத்­துக்கு எதி­ரான குற்­றங்க­ ளைச் செய்­த­தாக 2014ஆம் ஆண்டு வட கொரி­யா மீது ஐ.நா. குழு குற்­றம் சாட்­டி­யது. இந்த நாட்­டின் உயர் தலை­வர்­கள் மீது பன்­னாட்­டுக் குற்­றவி­யல் நீதி­ மன்­றத்­தில் வழக்கு தொடர வேண்­டும் என­வும் ஐ.நா பரிந்­து­ரைத்­தது.

கிம் வம்­சம்
வட­கொ­ரி­யா­வின் முதல் மற்­றும் நீண்­ட­கால தலை­வ­ராக இருந்­த­வர் கிம் இரண்­டாம் சங். ‘தன்­னு­ணர்வு’ என்ற சுய நம்­பிக்கைத் தத்­து­வத்தை அந்த நாட்டுக்கு அவர் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். இடை­வி­டாத பரப்­பு­ரை­க­ளின் மூலம், தன்­னைச் சுற்றி தனித்­து­வத்தை உரு­வாக்­கிக் கொண்­ட­தி­னால், எதி­ரி­களே இல்­லா­மல் 46 ஆண்­டு­கள் ஆட்சி செய்­தார் கிம் இரண்­டாம் சங். அப்­படி எதி­ரி­கள் இருந்­தால், அவர்­கள் வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

அந்தப் பாரம்­ப­ரி­யத்தை, தலை­வர் பத­வியை ஏற்­றுக் கொண்­ட­வு­டன் கிம் ஜோங்-­­­உன்­னும் கடை­ப்பி­டித்­தார். கிம் இரண்­டாம் சங், அவ­ரது மக­னான கிம் ஜோங்-­­­இல்லை 1980களில் கொரிய தொழி­லா­ளர்­கள் கட்சி மற்­றும் ராணு­வத்­தில் பெரிய பொறுப்­பு­களை அளித்து பதவி உயர்வு பெற வைத்தார். இந்த நிலை­யில், தலை­வர் பத­வியை கிம் ஜோங்-­­­இல் எடுத்து கொள்­வார் என தெரிய வந்­தது.

1994ஆம் ஆண்டு கிம் இரண்­டாம் சங் உயி­ரி­ழந்த பிறகு, அவ­ருக்கு ‘குடி­ய­ர­சின் நிரந்­தர அதி­பர்’ என்ற பெயர் சூட்­டப்­பட்­டது. மேலும், அந்­நாட்­டின் கட­வுள் போல அவர் கொண்­டா­டப்­பட்­டார். அவரைத் தொடர்ந்து ஆட்­சி­யில் அமர்ந்த கிம் ஜோங்-­­­இல், உல­கின் முதல் பரம்­பரை கம்­யூ­னிச நாடாக வட கொரி­யாவை ஆக்­கி­னார்.

அணு ஆயு­தங்­கள்
கிம் ஜோங் இல்­லின் ஆட்­சி­யில் வடகொரியாவின் பொரு­ளா­தார நிலை மோச­ம­டைந்து, அர­சி­யல் எதிர்ப்­பா­ளர்­கள் அதி­க­ரித்த­னர். மேலும், அவர் நாட்­டின் அணு ஆயு­தங்­கள் மற்­றும் நீண்ட தூர ஏவு­க­ணை­களை பெருக்கி­னார். அவர் 2011ஆம் ஆண்டு உயி­ரி­ழந்த பிறகு கிம் ஜோங் உன் இத­னைத் தொடர்ந்­தார்.

சமீப மாதங்­க­ளில் தென் கொரி­யா­வு­டன் அவர் வைத்­துள்ள உற­வு­மு­றை­யில் பெரிய மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது. இதற்­குக் கார­ணம், அமெ­ரிக்கா மற்­றும் ஐ.நா விதித்த அதிக பொரு­ளா­தார தடை­கள்­தான் என சிலர் குறிப்­பிடு­கின்­ற­னர்.

அணு ஆயு­தங்­கள் வடி­வ­மைப்­பில்தான் வல்­லமை பெற்று விட்­ட­தாக வட­கொ­ரியா கூறு­கி­றது. மேலும், அணு ஆயுத சோத­னை­க­ளுக்கு தடை விதிப்­ப­தா­க­வும் அறி­வித்­தது. இந்த அறி­விப்­பா­னது, கிம் அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்­பைச் சந்­திக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளதை அடுத்து வெளிவந்­துள்­ளது. கொரிய தீப­கற்­பத்தை அணு­சக்­தி­யற்ற இட­மாக மாற்ற தென்­கொ­ரிய அதி­பர் மூன் ஜே-இன்­னு­டன் சேர்ந்து பணி­பு­ரிய போவ­தாக வடகொரிய அதிபர் கூறு­கி­றார்.

ஆனால் இது எப்­படிச் சாத்­தி­யம் என்­பது குறித்த தக­வல்­கள் தெளி­வாக வெளி­யி­டப்­ப­ட­வில்லை. இந்த நிலை­யில், ஆய்­வா­ளர்­கள் இது குறித்து சந்­தே­கிக்க இரண்டு முக்­கிய கார­ணங்­கள் உள்­ளன.

அணு­ஆ­யுத சக்தி கொண்ட அமெ­ரிக்கா, தென்­கொ­ரி­யா­வுக்­கும் ஜப்­பா­னுக்­கும் பாது­காப்­புக்­கான உத்­த­ர­வா­தத்தை அளித்­துள்­ளதை வட­கொ­ரியா முக்­கிய பிரச்­ச­னை­யாகக் கரு­தும். இரண்­டா­வது கார­ணம்: இதே போன்ற ஒப்­பந்­தங்­கள் வட மற்­றும் தென் கொரி­யா­விற்கு இடையே போடப்­பட்டு, வட­கொ­ரியா அதனை மீறி­ய­தன் காரணமாக ஒப்­பந்­தம் கைவி­டப்­பட்­டது.

கிம்–மூன் சந்­திப்பை
கொரி­யப் மக்கள்
எப்­ப­டிப் பார்க்­கி­றார்­கள்?

சியோலில் உள்ள யு டியூப் பதி­வா­ளர் கொரி­யன் பில்லி கூறு­கை­யில், ‘‘இரு­நாட்டு தலை­வர்­க­ளும் அமைதி குறித்து பேசு­வதைப் பார்க்­கும்போது, உணர்ச்­சி­க­ர­மாக இருந்­தது. ஏனெ­னில் வட மற்­றும் தென் கொரி­யா­வுக்கு இடையே சுமு­க­மான உற­வையே கொரி­யர்­கள் எதிர்­பார்த்­த­னர். எதிர்­கா­லத்­தில் நான் வட கொரி­யா­வுக்கு பய­ணம் செல்ல முடி­யும் என்ற அள­விற்கு கற்­பனை செய்ய தொடங்கி விட்­டேன். வட கொரி­யா­விற்கு சென்று அந்த நாட்டு மக்­க­ளு­டன் பேச வேண்­டும் என்ற ஆசை நீண்ட நாள்­க­ளாக தென்­கொ­ரி­யர்­க­ளிடம் உண்டு’’ என்­கி­றார் அவர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!