“ஜனாதிபதி – பிரதமர் போட்டித் தன்மையுடன் செயற்படுவது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்”

கலங்கிய நீர் குட்டைக்குள் மீன் பிடிக்கும் செயற்பாட்டை ஜனாதிபதியும் பிரதமரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த, நாடு எதிர்கொண்டுள்ள நிலையிலும் இவ்விருவரும் போட்டித்தன்மையுடன் செயற்படுவது பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் 21 ஆம் திகதி தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதலை தொடர்ந்து நாடு பல சவால்களை எதிர்க்கொண்டுள்ளது. தற்போது சுற்றுலாத்துறை நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலும் பிரதமரும், ஜனாதிபதியும் போட்டித்தன்மையுடன் செயற்படுகின்றமையானது இவர்களது அரசியல் தேவைகளை சுட்டிக்காட்டுகின்றது எனவும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!