தகாது நடக்க முயற்­சித்த குற்­றச்­சாட்­டில் கைதான தொட­ருந்து உத்­தி­யோ­கத்­தருக்குப் பிணை­யில் !!

கொழும்­பில் இருந்து யாழ்ப்­பா­ணம் பய­ணித்த தொட­ருந்­தில் பெண் ஒரு­வ­ரு­டன் தகாத முறை­யில் நடந்­து­கொண்­டார் என்ற குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்ட தொட­ருந்து உத்­தி­யோ­கத்­தர் பிணை­யில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டார்.

கொழும்­பில் இருந்து யாழ்ப்­பா­ணம் நோக்­கிப் பய­ணித்த தொட­ருந்­தில் தமிழ்க் குடும்­பப் பெண் ஒரு­வர் வவு­னியா தொட­ருந்து நிலை­யத்­தில் இருந்து பய­ணத்தை ஆரம்­பித்­தார்.

தொட­ருந்­தில் மக்­கள் கூட்­டம் அதி­க­மில்­லாத நிலை­யில் சிட்டை பரி­சோ­திக்­கும் ஊழி­யர் ஒரு­வர் அந்­தப் பெண்­ணு­டன் தகாது நடக்க முயற்­சித்­தார் என்று கூறப்­ப­டு­கின்­றது. அதை அவ­தா­னித்த ஏனை­யோர் அந்த ஊழி­ய­ரி­டம் அது தொடர்­பில் கேள்­வி­யெ­ழுப்­பி­னர். ஊழி­யர் அவர்­க­ளைத் தாக்க முயற்­சித்­தார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

தமி­ழர்­களை அவர் கீழ்த்­த­ர­மான வார்த்­தை­க­ளால் திட்­டி­ய­து­டன், நீங்­கள் தமிழ் என்­றால் என்னை ஒன்­றும் செய்ய முடி­யாது. பொலி­ஸா­ரா­லும் என்னை ஒன்­றும் செய்ய முடி­யாது. இங்கு நான்­தான் பெரி­ய­வன் என்று அவர் மிரட்­டி­யுள்­ளார். சம்­பவ இடத்­தில் இருந்த ஊட­க­வி­ய­லா­ளர் ஒரு­வ­ரை­யும் மிரட்­டி­ யுள்­ளார்.

தொட­ருந்­து யாழ்ப்­பா­ணம் தொட­ருந்து நிலை­யத்தை அடைந்­த­தும் இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் தொட­ருந்து நிலைய அதி­ப­ரி­டம் பெண் முறை­யிட்­டார். ஆதா­ர­மா­கக் காணொ­லி­யும் வழங்­கப்­பட்­டது.

சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர் என்று கூறப்­ப­டும் ஊழி­ய­ரைக் கைது செய்த பொலி­ஸார் அவ­ரி­டம் விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர். சந்­தே­க­ந­பரை நேற்­றுப் பிற்­ப­கல் யாழ்ப்­பா­ணம் நீத­ிவான் மன்­றில் முற்­ப­டுத்­தி­னர்.

சந்­தே­ந­ப­ரைப் பிணை­யில் செல்ல அனு­ம­திப்­ப­தற்­குப் பொலி­ஸார் ஆட்­சே­பனை தெரி­விக்­க­வில்லை. சந்­தே­க­ந­பரை நிபந்­த­னை­யு­ட­ னான பிணை­யில் செல்ல நீதி­வான் சின்­னத்­துரை சதீஸ்­க­ரன் உத்­த­ர­விட்­டார்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வி­ட­மும் முறை­யி­டப்­பட்­டுள்­ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!