கமலின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி

JAPAN-INDIA/
எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதி அல்ல. அப்படி ஒரு பயங்கரவாதி இருப்பின் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் தஜீந்தர் பால் சிங் பாகா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

“பயங்கரவாதத்தை ஒரு மதத்திற்குள் வரையறுப்பது தவறு. இந்தியாவின் தேசத் தந்தையான காந்தியைக் கொன்றவரை இந்து பயங்கரவாதி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஆயிரக் கணக்கான சீக்கியர்களைக் கொன்று குவித்த ராஜீவ் காந்தியை அவர் எவ்வாறு அழைப்பார்? நாட்டில் மக்களிடையே மத அடிப்படையில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியுள்ள கமல்ஹாசன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி பதிலளிக்கையில்,

“எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதி அல்ல. அப்படி ஒரு பயங்கரவாதி இருப்பின் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது. எந்த ஒரு பயங்கரவாதியும் இந்து மதத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடிகர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது,“ சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஓர் இந்து. அவர் தான் மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்சே.” என பேசியது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!