அமெரிக்க இராஜாங்கச் செயலருடன் திலக் மாரப்பன சந்திப்பு

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நேற்றுக்காலை அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அமெரிக்காவுடன் உயர் மட்டப் பேச்சுக்களை நடத்துவதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழு வொசிங்டன் சென்றுள்ளது.

இந்த நிலையில், நேற்றுக்காலை அமெரிக்க இராஜாங்கச் செயலரை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சந்தித்துப் பேசினார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர், சிறிலங்கா- அமெரிக்கா இடையில் நடத்தப்பட்டுள்ள முதலாவது உயர்மட்டப் பேச்சுக்கள் இதுவாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!