பிளாஸ்டிக் கழிவுகளை திருப்பி அனுப்பும் மலேசியா

மலேசியா நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை எந்த நாட்டில் இருந்துகொண்டு வரப்பட்டதோ அங்கேயே திருப்பி அனுப்ப மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.

உலகளவில் சீனாவுக்கு பிறகு பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக சேரும் நாடாக மலேசிய இருக்கிறது.

இந்நிலையில் அந்த நாட்டில் சேர்ந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளில், 3000 தொன்னுக்கும் அதிகமான கழிவுகள் எந்தெந்த நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டதோ அங்கேயே திருப்பி அனுப்ப மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா என 14 நாடுகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் திருப்பி அனுப்பப்பட உள்ளன.

அந்த நாட்டில், அங்கீகாரம் இல்லாத பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் கழிவுகள் அதிகம் சேருவதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி மறுசுழற்ச்சிக்குட்படுத்த முடியாத 100 தொன் பிளாஸ்டிக் கழிவுகளை அவுஸ்திரேலியாவிற்கு திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் இருந்து அனுப்பப்பட்ட மறுசுழற்சியில், பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்டவற்றில் “புழுக்கள் நிறைந்து” காணப்பட்டுள்ளன என மலேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!