புலனாய்வுத் தகவல் ஏப்ரல் 8ஆம் திகதியே கிடைத்தது!- என்கிறார் தேசிய புலனாய்வு பிரிவு தலைவர்

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் குறித்த புலனாய்வுத் தகவல் தமக்கு ஏப்ரல் 8ஆம் திகதியே கிடைத்திருந்தது என்று தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் தெரிவித்துள்ளார். எனினும் அத்தகவல் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பில் அறியமுடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு நேற்று கூடியது. தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாமையால், கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தலைமையில் அந்த கூட்டம் இடம்பெற்றது.

நேற்றைய கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மற்றும் தேசிய புலனாய்வு தலைமை அதிகாரி சிசிர மென்டிஸ் ஆகியோர் சாட்சியமளித்திருந்தனர்.

இதன்போதே தாக்குதல் தொடர்பாக தகவல் முன்னதாகவே தமக்கு கிடைத்ததாக தேசிய புலனாய்வு தலைமை அதிகாரி சிசிர மென்டிஸ் தெரிவுக்குழு முன்னிலையில் குறிப்பிட்டார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!