உணவக சமயலறையில் உற்சாக குளியலிட்ட ஊழியர்!

அமெரிக்காவில், உணவகம் ஒன்றின் சமயலறையில் ஊழியர் ஒருவர் குளிக்கும் வீடியோ காட்சி வைரலாகிய நிலையில், அந்த நபர் பணிநீக்கம் செய்யப்பட்டார். புளோரிடா மாகாணத்தில், வெண்டேஸ்(wendeys) பாஸ்ட்புட் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் வேலைபார்க்கும் ஊழியர் ஒருவர், அண்மையில் சமயலறையின் பாத்திரம் கழுவும் தொட்டியில் சோப்பு நீரை நிரப்பி, உற்சாக குளியலிட்டார்.

இவரது செயலை சக ஊழியர்கள் கிண்டலடித்து சிரிக்கும் வீடியோ காட்சியானது அண்மையில் வலைதளங்களில் வைரலானது. இதனை பகிர்ந்த பலரும், ஊழியரின் செயல் அருவறுப்பாக உள்ளதாக கூறியதோடு, கண்டனமும் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த உணவக உரிமையாளர், உணவகத்தின் நன்மதிப்பை கெடுத்ததாக ஊழியரை பணியிலிருந்து நீக்கினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!