புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்கு கூட்­ட­மைப்­பின் ஒத்­து­ழைப்­புத் தொட­ரும் !!

அர­ச­மைப்பு உரு­வாக்­கம் என்ற விட­யத்துக்கு இது­வரை கால­மும் வழங்­கிய ஒத்­து­ழைப்பை தொடர்ந்­தும் வழங்­கு­வோம். ஆனால் இதனை அரசு முன்­னெ­டுக்­கத் தயங்­கி­னால், அரசு இத­னைச் செய்து முடிப்­ப ­தற்­கான அழுத்­தத்தை நாம் பிர­யோ­கிப்­போம். புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் கட­மை­யி­லி­ருந்து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன விலக முடி­யாது.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­யின் கொள்கை விளக்க உரை மீதான விவா­தம் நேற்று இடம்­பெற்­றது. இதன்­போது உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

நாடா­ளு­மன்­றில் கூட்டு அரசை அமைத்து, அதிலே முக்­கி­ய­மான ஒரு விட­ய­மாக நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­கள் தொடர்­பில் அரச தலை­வர் தனது உரை­யில் குறிப்­பி­டா­தமை ஏமாற்­றத்தை அளிக்­கி­றது. அரச தலை­வர் தனது உரை­யில் இத­னைக் குறிப்­பி­டா­த­தால் தோற்­றுப்­போன விட­ய­மா­கவோ அல்­லது இனி நடை­பெ­றாதோ என்று எவ­ரும் அத­னைக் கைவிட முடி­யாது. ஏனெ­னில் அது ஒரு தனி மனித வேணவா இல்லை. அவ­ரு­டைய தேர்­தல் அறிக்­கையை ஏற்று மக்­கள் அவ­ருக்கு வழங்­கிய ஆணை­யா­கும்.

அது மாத்­தி­ர­மன்றி முன்­னாள் அரச தலை­வர் மகிந்­த­வும் தன்­னு­டைய தேர்­தல் அறிக்­கை­யில் புதிய அர­ச­மைப்பு தயா­ரிக்­கப்­ப­டும் என்று உறு­தி­வ­ழங்­கி­யி­ருந்­தார். இதன் அடிப்­ப­டை­யில் நாட்­டில் உள்ள 90 வீத­மா­ன­வர்­கள் புதிய அர­ச­மைப்­புத் தயா­ரிப்­ப­தற்கு ஆணை வழங்­கி­யுள்­ள­னர்.

நாடா­ளு­மன்­றத்­தில் உள்ள சக­ல­ரும் இணைந்து ஏக­ம­ன­தாக நாடா­ளு­மன்­றத்தை அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யாக மாற்­றி­யுள்­ளோம். அது மாத்­தி­ர­மன்றி அர­ச­மைப்பு மறு­சீ­ர­மைப்பு செயற்­பா­டு­கள் எப்­படி இருக்க வேண்­டும் என்ற தீர்­மா­ன­மும் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான நிலை­யில் அரச தலை­வர் மைத்­திரி தனது கொள்கை விளக்க உரை­யில் இந்த விட­யங்­களை சுட்­டிக்­காட்­டா­த­தால் இவற்றை அரசு கைவிட்­டு­விட்­ட­தாக நாங்­கள் கரு­தப்­போ­வ­தில்லை.

அனைத்து மக்­க­ளும் சேர்ந்த செய்­கின்ற பிர­தா­ன­மான பணியை தொடர்ந்­தும் முன்­னெ­டுப்­போம். அரச தலை­வர் இந்த ஆணையைப் பெற்­ற­வ­ராக இருப்­ப­து­டன், அவ­ருக்கு எஞ்­சி­யி­ருக்­கும் சொற்ப காலத்­தில் இதற்­குத் தலை­மை­தாங்க வேண்­டும். அந்­தக் கட­மை­யி­லி­ருந்து அவர் தவற முடி­யாது என்­ப­தை­யும் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றோம். இதற்­குத் தேவை­யான ஒத்­து­ழைப்பை வழங்­கு­வோம். அரசு இத­னைச் செய்து முடிக்­கத் தயங்­கி­னால் அதற்­கான முழு அழுத்­தங்­க­ளை­யும் பிர­யோ­ கிப்­போம்.

அர­சி­யல் தீர்வு என்­பது தமிழ் மக்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி சக­ல­ருக்­கும் அவ­சி­ய­மா­னது. புதிய சமூக ஒப்­பந்­தத்­தின் அடிப்­ப­டை­யி­லேயே சக­ல­ரும் ஒற்று­மை­யாக வாழ முடி­யும். இத­னைப் புறந்­தள்­ளி­னால் வேறு பிர­தி­ ப­லன்கள் நாட்­டில் ஏற்­ப­ட­லாம். சகல இனங்­க­ளின் சுபீட்­சத்­துக்­கும் புதிய அர­ச­மைப்பே அவ­சி­ய­மா­னது. கொள்கை விளக்க உரை­யில் அரச தலை­வர் இத­னைக் குறிப்­பி­டா­மல் விட்­டமை பெரிய குறை­பா­டாக இருந்­தா­லும் அந்த செயற்­பாடு நடக்­க­வேண்­டும். நடக்க வைப்­போம் –- என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!