245 கிராம் எடையுடன் பிறந்த உலகிலேயே சிறிய பெண் குழந்தை!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உலகிலேயே குறைவான எடை கொண்ட குழந்தை பிறந்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மருத்துவனை ஒன்றில் வெறும் 245 கிராம் எடையுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த போது ஆப்பிள் பழத்தின் எடையில் இருந்த இந்த குழந்தை தான் உலகிலேயே சிறிய குழந்தை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான கர்ப்ப காலமான 40 வாரங்களில் 23 வாரங்கள் மட்டுமே தாயின் கர்ப்ப பையில் இருந்து இந்த குழந்தை, பிறந்து ஒரு மணி நேரத்தில் இறந்துவிடும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் பலவீனமான நிலையில் பிறந்த இந்த குழந்தையின் உடல்நலம் தற்போது சீராகி உள்ளது. தற்போது இந்த குழந்தை 2.2 கிலோகிராம் எடையுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!