ஹபாயா விட­யத்­தில் -சம்­பந்­தன் கூறி­யது தவ­றா­ன­தல்­லவே!!

எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன், குறிப்­பிட்ட ஆசி­ரி­யர்­கள் சேலை அணிந்து வர­வேண்­டு­மெ­னக் குறிப்­பிட்­டுள்­ளாரே தவிர, கபாயா அணிய வேண்­டா­மெ­னக் கூற­வில்லை. அவ­ரது கருத்தை அவ­ரது காலப்­ப­கு­தி­யில் இலங்­கை­யில் இருந்த முஸ்­லிம் ஆடை சம்­பந்­த­மான நடை­மு­றை­க­ளைக் கருத்­திற்­கொண்டு வழங்­கப்­பட்ட ஒரு கருத்­தா­கத்­தான் முஸ்­லிம்­கள் எடுத்­து­கொள்ள வேண்­டும்.

இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துல் நியாஸ் சீனி முகமத் தெரி­வித்­தார். வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

முஸ்­லிம் ஆசி­ரி­யை­கள் சாறி­அ­ணி­யாது பாட­சா­லைக்கு ஹபாயா உடை­யில் வரு­வ­தற்கு ஆட்­சே­பனை தெரி­வித்து கணி­ச­மான மக்­கள் தொகையை கொண்ட ஒரு கூட்­டம் எதிர்ப்பு ஆர்­பாட்ட மொன்­றி­லும் ஈடு­பட்­டது. இத­னைத் தொடர்ந்து தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா. சம்­பந்­தன் இது சம்­பந்­த­மான கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கும்­போது முஸ்­லிம் ஆசி­ரி­யை­கள் சேலை அணிந்து கட­மைக்கு செல்­வதே அந்­தப் பிரச்­சி­னைக்கு தீர்­வா­கும்˜ என்று தெளி­வற்ற ஒரு அறிக்­கையை விடுத்­த­தன் மூலம் இந்­தப் பிரச்­சினை மேலும் சிக்­க­லான ஒரு நிலை­மையை அடைந்­தது.

சம்­பந்­த­னின் கூற்று, முஸ்­லிம்­க­ளின் மார்க்­க­ரீ­தி­யான ஆடைக்கு எதி­ரான கருத்­தா­கவே முஸ்­லிம் மக்­க­ளில் சிலர் எடுத்­துக்­கொண்­டுள்­ள­னர் என்று விளங்­கு­கின்­றது.

ஒரு நாட்­டில் அல்­லது ஒரு பிர­தே­சத்­தில் ஒரு சமூ­கத்­துக்கு அல்­லது அதற்கு மேற்­பட்ட எண்­ணிக்­கை­யி­லான சமு­கங்­க­ளுக்­கி­டை­யில் மனி­தர் என்ற வகை­யில் பிரச்­சி­னை­கள் எழு­வ­துண்டு. ஆகவே நான் அல்­லது நம்­ம­வர்­கள் மட்­டும் வாழ வேண்­டும் என்று நினைப்­பது மனித இனத்­துக்கு மனி­தன் செய்­யும் பெரிய அநி­ய­யாம்.

பிரச்­சி­னை­க­ளைக் கதைத்­துத் தீர்த்­துக் கொள்­வ­தில் இயற்­கை­யான ஒரு நீதி கடை­பி­டிக்­கப்­பட வேண்­டும். நீதி மட்­டுமே தீர்­வின் ஆரம்­ப­மும் அடிப்­ப­டை­யு­மாக இருத்­தல் வேண்­டும். இந்த நீதியை விளங்­கிக் கொள்­வ­தற்கு மனச்­சாட்சி இருந்­தால் போது­மா­னது.

இயற்­கை­யான நீதியை விளங்­கிக் கொள்­வ­தற்கு ஒரு­வன் பேர­றி­ஞ­ராக இருக்க வேண்­டும் என்ற கட்­டா­ய­மில்லை. இந்த நாட்­டில் படித்த அனு­ப­வ­மிக்­க­வர்­க­ளும் தத்­த­மது மனச்­சாட்­சி­யைப் புரிந்து கொள்­ள­மு­டி­யா­த­நிலை காணப்­ப­டு­கி­றது. இது­தான் இன்­றைய சமூ­கங்­க­ளு­கி­டை­யில் இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்­வொன்றை எட்­ட­மு­டி­யா­த­தற்கு அடிப்­படை கார­ணம் – என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!