தீபிகா படுகோன் பற்றி சில நாட்களாகவே சர்ச்சைகளாக தான் வந்து கொண்டிருக்கிறது. தற்போது இவர் நடிப்பில் வெளிவரயிருக்கும் படம் ஃபைண்டிங் ஃபைனி.
இப்படத்தில் தீபிகா படுகோனுக்கும், ரன்வீர் சிங்கிற்கும் திருமணம் ஆவது தான் படத்தின் முதல் காட்சி. திருமணம் ஆன 15 நிமிடங்களிலேயே ரன்வீர் இறந்து விடுவாராம்.
பின் அவருக்கு அர்ஜுன் கபூருடன் காதல் மலருகிறது, அப்போது, தான் இன்னும் கற்போடு தான் உள்ளேன் என்று அவர் கூறுவது போல் வசனம் இடம்பெற்றுள்ளது.
சென்ஸாரில் இந்த வசனத்திற்கு மிகவும் எதிர்ப்பு வந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
















