சஹ்ரான் குழுவின் 32 பேருக்கு ஊதியம் கொடுத்த மகிந்த அரசு – அரசின் கையில் சான்றுகள்

தீவிரவாதி சஹ்ரான் காசிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு, மகிந்த ராஜபக்ச அரசாங்கம், நிதி கொடுப்பனவுகளை வழங்கியது என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

”சஹ்ரான் காசிம் மற்றும் அவரது நண்பர்களான, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த 32 பேருக்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நிதிக் கொடுப்பனவுகளை வழங்கி வந்துள்ளது.

இந்த தீவிரவாதிகளுக்கு முன்னைய ஆட்சியாளர்களால் ஊதியம் கொடுக்கப்பட்டதற்கு போதுமான சான்றுகளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.

எவ்வளவு நிதி கொடுக்கப்பட்டுள்ளது என்று கண்டறிய வேண்டியுள்ளது. இதனை நாங்கள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்பாக நிரூபிப்போம்” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!